அசோகமித்திரன்/சாயா மனம் கந்தசாமி

(படைப்பாளிகள் உலகம் என்ற புத்தகத்திலிருந்து)


இந்த ஆண்டு (1991) தமிழ் மொழிக்கு சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சா. கந்தசாமி என்று அறிவிப்பு வந்தபோது நவீன தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் பெரும் மகிழ்வோடு அதை ஆமோதித் தார்கள். முப்பதாண்டுகளாகப் பல சிறப்பான படைப்புகள் மூலம் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருபவருக்குத் தானே விருது தரப்படுகிறது?
சென்னை ‘வாசகர் வட்டம்’ 1969 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘சாயாவனம்’ கந்தசாமியின் முதல் நாவல் ன்றாலும் அன்று அவர் முக்கியப் பங்கேற்று நடத்திய இலக்கியச் சங்கம்” என்ற அமைப்பும் “கோணல்கள்” (1968) என்ற நான்கு ஆசிரியர்களின் பன்னிரண்டு சிறுகதை
கொண்ட தொகுப்பும் அவரை விசேஷ கவனத்துக்குரியவராகக் காட்டின. சிறுகதை பற்றி இலக்கியச் சங்கம் த்திய ஒரு கருத்தரங்கு இன்றும் மேற்கோள் காட்டப் ட்டு வருகிறது. க.நா.சுப்பிரமணியனும், கு. அழகிரி சாமியும் இரு அணிகளுக்குத் தலைமை தாங்கி விரிவான கட்டுரைகள் படித்தார்கள். புது தில்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தாட்’ என்ற பத்திரிகை ‘கோணல்கள்’ குறித்து ஒரு சிறப்பு இணைப்பு வெளியிட்டது. ‘சாயாவனம்’ இந்த நூற்றாண்டின் மகத்தான இந்திய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகப் பேராசிரியர் கே.எம்.ஜார்ஜ் தேசிய புத்தக டிரஸ்டுக்காகத் தொகுத்த கலைக் களஞ்சியத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
‘சாயாவனம்’ உறுதியும் கற்பனையும் பூண்டதோர் இளைஞனின் கதையைக் கூறுகையில், தமிழகத்தில் விவசாயத்துறையில் ஏற்படும் மாற்றம் பற்றியும் புராதன உற்பத்தி முறைகளில் இயந்திரங்கள் புகுவது பற்றியும் கூறியது. மையத்தில் தொடங்கி வெளிவட்டத்திற்குள் விரியும் உலகப் பார்வை; மனிதர்கள் எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு சமூகமும் புறஉலகும் முக்கியமானவை. இது கந்தசாமியின் இதர நாவல்களாகிய ‘அவன் ஆனது, ‘தொலைந்து போனவர்கள்,’ ‘சூர்யவம்சம்,’ ‘வேலையற்ற வன்,’ ‘எட்டாவது கடல்’ ஆகியவற்றிலும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பாத்திரங்கள், களன்கள் மூலம் வெளிப்படும். இங்கு ஒரு முக்கிய தகவல். கந்தசாமி யுடைய எந்த நாவலும் தொடர்கதையாகப் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. எல்லாமே நூலுருவில் வெளிவந்தவை. முதல் படைப்பில் இருந்த செய்நேர்த்தியும், மிகை தவிர்த்த தொடராகவும் எடுக்கப்பட்டு பெரும் மதிப்பும் பரிசும் பெற்றன. கந்தசாமி இவை தவிரப் பல குறும்படங்களும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகத் தயாரித்திருக்கிறார். ஓவியர் தனபால், எழுத்தாளர் அசோகமித்திரன் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் சென்னைக் கலைக் கல்லூரி மற்றும் தரங்கம் பாடி பற்றிய விவரணப் படங்களும் சிறப்பானவை. ‘காலம்தோறும் கலைகள்’ என்ற கருத்துப் படத்தையும் குறிப்பிட வேண்டும். கந்தசாமியே தமிழ்நாடு லலித கலா அகாதமியின் ‘சிறந்த கலை விமர்சகர்’ என்ற விருதினை ஒரு முறை பெற்றிருக்கிறார்.
தமிழ்ச் சிறு பத்திரிகைகளில் ஒரு மைல்கல் என்று அறியப்படும் ‘கசடதபற’ இலக்கியப் பத்திரிகையின் ஒரு ஆசிரியராகவும் பல தொகுப்பு நூல்களுக்குத் தொகுப்பாசி ரியராகவும் கந்தசாமி பணியாற்றியிருக்கிறார். அவர் கவிதை எழுதியதில்லை. ஆனால் அவருடைய பொறுப்பில் வெளி வந்த இரு கவிதைத் தொகுப்புகளும் இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை விகசிப்பை துல்லியமாக வெளிக்காட்டு பவை. அவருடைய நண்பர் ஆர்.ராஜகோபாலனுடன் இணைந்து 1997 இல் அவர் கொணர்ந்த ‘கவிதை என்றும்’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தொண்ணூறு சிறிய பக்கங் களில் புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், திருக்குறள் எனத் தொடங்கி ஞானகூத்தன், வைதீஸ்வரன், சுகந்தி சுப்பிரமணியம், மனுஷ்யபுத்திரன் வரை தேர்ந்தெடுத்த சிறு சிறு கவிதைகள். இதில் பத்திரகிரியாரும் உண்டு. நகுலனும் உண்டு. கவிஞர்களோடு தமிழகத்தின் நவீன ஓவியர்களின் முன்னேற்றத்திலும் கந்தசாமிக்கு நிரம்ப அக்கறை உண்டு. அவர் தொலைக்காட்சி சாதனங்களை நாடிப் போனதற்கு வெறும் எழுத்து ஓவிய மற்றும் சிற்பக் கலைக்கு நியாயம் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இருக்கலாம்.
ஐம்பத்தெட்டு வயது நிரம்பிய கந்தசாமியின் பூர்வீகம் அன்று மாயவரம் என்று அறியப்பட்ட மயிலாடுதுறை, அவருடைய மனைவி, இரு மகன்கள், மகளும் அவருக்கீடான கலை இலக்கிய ஈடுபாடு உடையவர்கள். அவருடைய தொலைக்காட்சி முயற்சிகளில் அவர்களுடைய பங்கு கணிசமானது.