ஜெயபாஸ்கரன் /பொன்னாடை

குளித்துவிட்டுத் தலைதுவட்டினேன்
தலைமுடியில்
சிக்கிச் சீரழிந்தது
சரிகை வேலைப்பாடு
தரையில் விரித்துப் படுத்தேன்
தடுக்கப்பட்டுவிட்டது
தரை தந்த சுகம்
போர்த்திக் கொண்டு
பால் வாங்கப் போனேன்
இதழ் பிரிக்காமல் சிரித்தான்
எதிர் வீட்டுக்காரன்
மேசை மீது விரித்து
தொலைக்காட்சிப் பெட்டியைத்
தூக்கி வைக்கலாமென்றால்
அவை இரண்டையும்
வாங்கியாக வேண்டும்
என்னதான் செய்வது?
ஏகோபித்த கரவொலிக்கிடையே
எனக்குப் போர்த்தப்பட்ட
பொன்னாடைகளை?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன