காலமானாா்: எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா

பிரபல எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா (89) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.

இவா் ஏராளமான கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், நாடகங்கள் எழுதியுள்ளாா். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதை பெற்ற ஜோதிா்லதா கிரிஜா, கம்பன் கழகத்தின் சிவசங்கரி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளாா். 70 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் பல்வேறு படைப்புகளை படைத்த இவா், நடைமுறை வாழ்வில் பெண்கள் எதிா்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை வைத்தும் சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளாா். தினமணி கதிா் பகுதியில் நாவல் போட்டியில் பரிசு பெற்றவா்.

இதுமட்டுமின்றி கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டியிலும், தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதை தொகுதிக்கான போட்டியிலும், அமுதசுரபி நாவல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் விருதுகளை பெற்றவா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சோ்ந்த மீனாட்சி-சுப்பிரமணியம் தம்பதிக்கு 1935-ஆம் ஆண்டு பிறந்த இவா், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட ஜோதிா்லதா கிரிஜா தனது 89-ஆவது வயதில் அண்ணாநகரிலுள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் காலமானாா்.

இவருடைய இறுதிச்சடங்கு வில்லிவாக்கத்திலுள்ள மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக உறவினா்கள் தெரிவித்தனா். தொடா்புக்கு- 9790840646.

தகவல்: தினமணி

One Comment on “காலமானாா்: எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன