எஸ்ஸார்சி/அனுபவம்

ஜூம் கவியரங்கம்

19/4/24

பச்சைக் கொத்துமல்லி
ரசம் வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப் போனேன்
சிறு கத்தை
டாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்
பார்த்த மருமகள்
இது பார்ஸ்லே என்றாள்
வாயில் போட்டுப் பார்த்தேன்
சுவையில் ஏதோ ஓர் நெடி
திரும்பக் கொண்டு கொடு
கடையில் என்றாள் மனைவி
உரிய பில்லோடு
கடைக்குப் போனேன்
அமேசானில் அதே உபசரிப்பு
அதே மரியாதை
கொத்துமல்லிக் காசோடு
அதற்கு எத்தனை வரி
போட்டிருந்ததோ இரண்டையும் கூட்டி
திருப்பிக்கொடுத்தாள்
புன்னகைத்தாள் கடைக்காரி
நன்றி பல சொன்னாள்
திரும்பக்கொடுத்த டாலருக்கும் பில் தந்தாள்
நம்மூரில் தங்கமே வாங்கினாலும் இதுவெல்லாம்
இப்படிச் சாத்தியமேயில்லை.

One Comment on “எஸ்ஸார்சி/அனுபவம்”

  1. உண்மையான பதிவு. அமெரிக்கா அமெரிக்கா தான், இந்தியா இந்தியாதான்.யோவ் நீ பார்த்து வாங்கின்னு போகாம என்உசிரைவாங்கரே என்றபேச்சுஇதில் திரும்ப க்கொடுத்ததற்கு பணமா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன