அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார்

வாசு தேவன்

(முகநூலிருந்து எடுத்துப்   பதிவு செய்தது )

அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார் பெங்காலி. மத்தியபிரதேசத்தில் பிறந்த கங்குலி சினிமாவுக்காக கிஷோர் குமாராக மாறினார். மனுஷன் மகா கஞ்சன். 100% அட்வான்ஸ் கொடுத்தால்தான் பாடுவார்.

இலவசம் என்ற பேச்சே கிடையாது. இதனாலேயே பல நடிகர்கள் / இயக்குநர்களோடு தகராறு. ஆனால் மொத்த ஹிந்தி திரையுலகமும் கிஷோரைதான் நம்பி இருந்தது. வேறு வழியின்றி முழு தொகையையும் கொடுத்து பாடவைத்தார்கள். இதனாலேயே அமிதாப்புக்கும் கிஷோருக்கும் கைகலப்பு வரும் அளவுக்கு தகராறு முற்றியது.

ஷோக் பேர்வழி. நான்கு திருமணங்கள். மதுபாலாவை திருமணம் செய்து கொண்டபோது மதம் மாறி அப்துல் என பெயரை மாற்றிக்கொண்டார்.

சினிமா உலகத்தில் அவருக்கு நெருங்கிய நட்பு என யாரும் கிடையாது. ஆகச்சிறந்த இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனை தவிர.(ஆர்.டி.பர்மனின் தந்தை). S.D.பர்மன் திரிபுரா ராயல் குடும்பத்தில் பிறந்தவர். கோடீஸ்வரர். உண்மையில் இருவரின் நட்பும் நெகிழ வைக்கும்.

எஸ்.டி.பர்மனிடம் கஞ்சத்த‌னத்தை வெளிப்படுத்தாதவர். பெரும்பாலும் டியூன் போடுவது கிஷோர் அல்லது பர்மன் வீட்டில் நடக்கும். பர்மனின் மரணமும் காவியமாக அமைந்தது. ஹரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் அமிதாப் நடித்த Mili படத்திற்கான ஒரு பாடலுக்கு கிஷோர் பாட பர்மன் பின்ணனி இசையை முடிவு செய்கிறார்.

பர்மன் வீட்டிலிருந்து கிஷோர் புறப்பட்டு சென்று சில மணிநேரங்களில் அவருக்கு தகவல் வருகிறது. பர்மன் சடாலென சரிந்து விழுந்துள்ளார்.. உடனடியாக பர்மனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது பர்மன் பிடிவாதமாக மறுத்து. நாளை ரிகார்டிங் முடிந்தவுடன் வருவதாக சொன்னபோது,

கிஷோர் குரலை மாற்றி தொண்டையில் திடீரென பிரச்சினை வந்ததாகவும் ரிகார்டிங் அடுத்த வாரம் நடக்கும் என பொய் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். (கிஷோர் பெண் குரலிலும் பாடுவதில் கில்லாடி). பர்மன் மருத்துவமனையில் நுழைவதற்கு முன் கிஷோரிடம் ” ஒருவேளை ரிக்கார்டிங்குக்கு நான் வரமுடியவில்லை என்றாலும், ஸ்டூடியோவில் நான் இருப்பது போல் பாவித்துக் கொண்டு பாடு” என்பதற்கிணங்க அடுத்த நாள் கிஷோர் பாடி பதிவுசெய்யப்பட்டது.

பர்மன் இசையமைத்த கடைசி பாடல். அதுமட்டுமின்றி அடுத்த நாள் கிஷோர் பர்மனுக்காக ஒலிப்பதிவை நாடாவை ஓடவிட்டார்.

பர்மன் இல்லாமல் பதிவுசெய்த கிஷோரின் மெல்லிய சோக குரலை உணரமுடியும். ” கிஷோர் பிரமாதம். ஜெயிச்சுட்டே” பர்மன் உதிர்த்த இறுதி வாக்கியம். அடுத்த சில மணிநேரங்களில் அவர் காலமானார். அந்தப்பாடலை கேட்கலாம்…

One Comment on “அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார்”

Comments are closed.