ஆர் வத்ஸலா/பழக்கம்

பல்லாண்டுகளாக சகிக்கிறேன்
அடியை
சொல்
கை
கால்
இன்னும் ஏதேதோ ஆயுதங்களை
பயன்படுத்துவதில் சிறப்பு
ஆராய்ச்சி செய்தவனிடம்

தினமும் சொல்கிறேன் எல்லோரிடமும்
என்னிடமும் தான்
இன்றுதான் கடைசி என

இன்று போயிருப்பேன் நிச்சயமாக
சமையல் வாயு சிலிண்டர் வந்து விட்டிருந்தால்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன