சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

25 04 2024

“அவன் புலம்பினான்,”

அவன் புலம்பினான்,
எத்தனை துரோகங்கள்
கண்டு துவண்டு போனேன்
அது அவன் வாழ்வைச் சிதைத்தது. 1

அருகில் வந்து அமர்ந்தவுடன்
புலம்பித் தீர்த்தான்
“சாதிக்க வேண்டும்
உன்னத நிலையை அடைய வேண்டும். 2

வழிகள் சொல்லுங்கள் குருவே
கைகூப்பி கேட்டான்
எதிரில் அமர்ந்தவன்
தடுமாறித்தான் போனான். 3

குருயென்று சொல்லப்பட்டவன்
அவன் எதிரில் வைத்திருந்த
தேநீரை ரசித்துக் கொண்டிருந்தான்
காலம் நம் கையிலேயில்லை. 4

குரு என்றவன் யோசனையோ எங்கேயோ
அவன் கையில் தேநீர் கோப்பை
ரசித்து ருசித்து குடித்தான்
யார் கவலைக்கும் மருந்தில்லை அவனிடம். 5


26 04 2024

“குளத்தில் மலர்கள்”

சேற்றில் காலையில் சிரிக்கும் செந்தாமரை…
இரவில் அழகாகச் சிரிக்கும் அல்லி
சேறான குளத்தைச்
சிறப்பாக அலங்கரிக்கும். 1

அழகாக மொட்டுடனே காத்திருக்கும்
சரியான சமயத்தில் மலர்ந்து சிரிக்கும்
நீர் வாழ் மீன்களும் புழுக்களும்
சர்வ சுதந்திரமாகச் சுற்றி வரும். 2

இலையும் மலரும்
அசைந்து ஆடிக்கொண்டே
அந்த குளக்கரையில்
ஆனந்தம் கொடுக்கும். 3

சூரிய உதயமும் சூரிய மறைதலும்
தான் கொண்டிருந்த துயில் கலைக்க
மெதுவாக விரித்தது தன்னிதழ்களை
மலர்ந்தது தாமரை மலர் மட்டுமல்ல
அல்லியும் கூடத்தான். 4

பார்ப்பவர் மனது
மகிழ்ச்சியில் துள்ள
அழகு அள்ளிச்சென்றது
மீனோ துள்ளிச் சென்றது. 5

சுரேஷ் ராஜகோபால்,
சிட்லபாக்கம்,

2 Comments on “சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன