புவனா சந்திரசேகரன்/சொற்களின் ஆட்சி

அழகிய சிங்கரின் 46 ஆவது இணைய காலக் கவியரங்கம்.

சொற்கள் தென்றலாய்
உள்ளத்தை வருடலாம்!
சொற்கள் அம்புகளாய்
இதயத்தைத் துளைக்கலாம்!
சொற்கள் ஏவுகணைகளாய்
எதிரியை அழிக்கலாம்!
சொற்கள் இசையாக
இனிமை பரப்பலாம்!
சொற்கள் விமர்சனமாகத்
தட்டிக் கொடுக்கலாம்!
குத்திக் கிழிக்கலாம்!
சொற்கள் தாலாட்டாக
உறங்க வைக்கலாம்!
சொற்கள் நண்பனாக
உதவிக்கரம் நீட்டலாம்!
சொற்கள் தலைவனாக
முன்னேற வழிகாட்டலாம்!
சொற்கள் அறிவுஜீவியாக
உன்னுடன் விவாதிக்கலாம்!
சொற்கள் கவிதைகளாக
மொழியை வளர்க்கலாம்!
சொற்கள் காதலுடன்
நேசம் வளர்க்கலாம்!
சொற்கள் மலர்களாக
மணம் வீசி மகிழ்விக்கலாம்!
படைப்பாளிகளின் சொற்களில்
பொறுப்பு அதிகமன்றோ!
சொற்களைப் பொறுப்புடன்
கையாண்டு களிப்போம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன