மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

நீ என்ன வறியவனா ??

அவ்வப்போது அலைபேசி
அலறியது,
தொடும் மனம் இல்லை.

குப்பென்று வந்த வாசம்,
ஆங்காங்கு
அடியவர் நலத்தில் அக்கரை
எனக் காட்ட
மாட்டியிருந்த
மின் விசிறிக் காற்றில்
பரவியது.

அப்புறம் என்ன? பலர்’ உவ்வே’
என எடுத்தனர்.
இரண்டு மணி நேரம் இதன்
சகவாசம்.

சரளைக் கற்கள் கலந்த
மேட்டில்
ஏறியது வரிசை. அடடா
இருவர்
வருபவர்க்கு வீசினர் அட்டை
விசிறிச் சாமரம்.
நேர்வழி தடையென.
என்ன
வரவேற்பு வரதா?.

மேட்டில் நீண்டு வலப்புறம்
திரும்பி
நடக்க வசந்த மண்டபத்தில்
ஒய்யாரமாய்
உன் தரிசனம்.

கஜேந்திரனுக்கு ஓடினாய்,
கண்டவர்க்கு
அருளினாய், காண வந்தவரை
வதைத்தாய்.
என்ன தர்மம் இது?.

பரந்தாமா,
நீ என்ன வறியவனா?
ஒருவர்
மட்டும் செல்லும் வரிசைகள்
அமைத்து
அடியவரை
வீதி சுற்ற
வைத்திடாது நேர்வழியில்
விடக் கூடாதா?.

நாடெலாம் தூய்மை பறை
சாற்ற
உன் வளாகத்தில் துர் நாற்றம் !!!

ஊடகங்கள் அவலத்தைப்
பறைசாற்றாமல்
வாய் பூட்டிக் கொண்டது ஏன்?.

உனைக் கண்ட வேளை,
உன்னோடு
சண்டை இடவே எண்ணம்.

என்மனம் அறியாது
உடன்
எனை அகற்றினர்
உன்
காவலர்.ஆமாம்
புரியாத உலகம் இது.


2. சொல்லத்தான் நினைக்கிறேன்.

பேருந்து நெரிசலில் முட்டி
மோதித்
தள்ளி
ஏறுபவரிடம்,

உணவகத்தில் இலையில்
கரண்டியைத்
தட்டித் தட்டிப் பறிமாறுபவரிடம்,

சாலையில் கண்ட இடத்தில்
துப்புவோர்,
பழத்தோல் வீசுபவரிடம்,

இரண்டாம் வகுப்பில் குளிர்சாதனப்
பெட்டியில்
தேனீர்,உணவருந்தி ,
எஞ்சியதை
அங்கேயே அடுக்கி
வைப்பவரிடம.,

இருசக்கர வாகனத்தில்
மின்னல்
வேகம் கூட்டி உயிர்பலி
வாங்குவோரிடம்

சொல்லத்தான்
நினைக்கிறேன்
நானும்,
பொதுநலன் கொஞ்சம்
பாருங்களேன்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன