
சுனிதாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் ஆபீஸில் ஒரே பேச்சு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? தன் னுடன் வேலை பார்க்கும் ஒரு மராட்டி பையனைக் காதலிக்கிறாள். சுந்தரத்தின் காதலை பற்றிp வீட்டில் சொல்லும்போது மகன் மேல் உள்ள நம்பிக்கையினால் அவர்கள் உடனே சரி என்று சொல்லிவிட்டனர். ஆனால் தங்கை கல்யாணம் முடிந்த பிறகு தான் உன் கல்யாணம் அதுவரைக்கும் நீ பொறுத்து இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். ஆனால் பெண் வீட்டில் இதற்கு பயங்கர எதிர்ப்பு. ‘சுந்தரின் அம்மா மராட்டியில் உன்னை அடிக்கச் சொன்னால் உனக்கு அதுகூட புரியாது’ என்று எத்தனையோ மிரட்டி பார்த்தனர். ஆனால் சுனிதா உறுதியாக இருந்ததால் கல்யாணத்துக்கு சம்மதித்தனர். சுந்தரின் பெற்றோர்கள் கல்யாணம் தங்கள் முறைப்படி குஜராத்தில் நடக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். சுந்தர் வீட்டு மனிதர்களின் பழகும் முறை, அவர்கள் வரதட்சணை என்று எதுவும் எதிர்பார்க்காதது சுனிதா வீட்டாற்கு மிகவும் சந்தோஷம். குஜராத்தில் கல்யாணத்திற்கு யார் வருவீர்கள் என்று கேட்க ஆபீஸில், வீட்டில் எல்லோரும் டிக்கெட் புக் பண்ணுவதற்காக தங்களது பெயர், வயது எல்லாம் கொடுத்தார்கள். ரயிலில் நாலஞ்சு பெட்டி களில் இவர்கள் இருந்தனர். பாட்டும் பேச்சுமாக கலகல என்று அவர்கள் குஜராத்தில் கால் பதித்தனர். பிள்ளை வீட்டிலிருந்து எல்லோரும் வந்து சுனிதாவின் பெற்றோர்களுக்கும், நெருங்கிய சொந்தக்காரர்களுக்கும் சிறிய மாலை போட்டனர். இதுவே ரொம்ப வேடிக்கையாக இருந்தது. கல்யாணத்தன்று ‘அந்தர்பத்’ சம்பிரதாயபடி மாப்பிள்ளை பெண் நடுவில் ஒரு பட்டு அங்க வஸ்திரம் இரண்டு ப்ரோகிதர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டது எல்லோர் கையிலேயும் அவர்களுடைய விசேஷமான வடாபாவ் கொடுக்கப்பட்டது. வலது கையில் வடாபாவ் வைத்துக் கொண்டு இட துகையால் பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் அட்சதை போட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இது நடுவில் சுந்தரை விட்டு பிரியாத நாயும் கல்யாண மண்டபத்தில் இருந்தது. அதற்கு புதிதான சுனிதா மூக்கில் போடப்பட்ட பெரிய நத்தும் குஞ்சலமும் வேடிக்கையாக இருந்தது.அவளது கையிலிருந்து வடாபா வ் எப்பொழுது கீழே விழும் என்று பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு கௌரி பூஜை, சப்தபதி,கருமசம்பதி என்ற எல்லா சடங்குகளும் நடந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் ஒரு திரைக்கு அந்தப் பக்கத்திலிருந்து சுந்தர் தாலி கட்டியது இந்த திருமணத்தின் முக்கிய அம்சம் என்று பெண் வீட்டார் ஆச்சரியப்பட்டனர். இப்போது சுனிதா வீட்ட வர்கள் நாம் தேடினால் கூட இப்படிப்பட்ட சம்மந்தம் கிடைக்குமா என்று தெரியவில்லை நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.
