
அபிராமி அந்தாதி
அபிராமி எப்படி இருப்பாள் ?
மற்ற பெண்களை போல் இருப்பாளா ?
ரொம்ப அழகான பெண்ணாக இருப்பாளோ ?
அவள் கண் எப்படி இருக்கும் ? மான் போல இருக்குமா ?
அவள் மார்பகங்கள் எப்படி இருக்கும் ? தாமரை மொட்டு போல் இருக்குமா ?
அவளை மலை மகள் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் அவளும் ஒரு சாதாரண
பெண் போலத்தானே இருப்பாள் ?
இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி
பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி
இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின்
உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர்.
பாடல்
நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
பொருள்
இது நகைப்புக்கு இடமானது…எது
இந்த உலகம்தான்
எல்லோரையும் ஈன்றெடுத்த நாயகி
மார்புகள் தாமரை மொட்டுகள்
கண்கள் மானைப் போன்றவை
அவள் முடிவே இல்லாதவள்
முடிவு எப்படி இல்லையோ,அப்படியே பிறவியும் இல்லாதவள்
நாம் அவளை மலைமகள் என்று கூறுவதும் சற்று மிகை தான்
இவளுடைய தன்மையை நாடி,அறிந்து விரும்புவதே நாம் செய்யக் கூடியதாகும்
இறைவன் என்பது உருவம் அல்ல. அது ஒரு தன்மை.
.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி அது.
-
