விஞ்ஞானி/வலி”மை

இனி முடியாதென கிணற்றை எட்டிப் பார்த்தான்,உயிரை விட்டுவிட.
அங்கே பாழ் கிணற்று அழுக்கு நீரில் நீந்தி களித்தது  ஒரு தவளை‌.
தவளையை விளித்து இப்படி
கிணற்று தவளையாய் வாழ்வது
உனக்கு வலிக்க வில்லையா என்றான்.
வலியா அப்படி என்றால் என்ன எனக்கு புரியவில்லை என்றது தவளை.
தன் நிலை எண்ணி வருந்துவது என்றான் அவன்.
எனக்கு தெரியவில்லை வேண்டுமானால் என் சகோதரனை கேட்டுப்பார் என்றது.
அது யார் என வினவியவனிடம் “பாறைக்குள் உயிர்த்திருக்கும் தேரை” என்றது. 

()

2 Comments on “விஞ்ஞானி/வலி”மை”

Comments are closed.