வளவ.துரையன்/பேரம்

வாசலிலிருந்து மகன் குரல் கேட்டது.
“அப்பா,ஒட்டு மாங்கா வந்திருக்குப்பா”

ஆறு வயதுள்ள அவன் ஒரு மாங்காய்ப் பிரியன்.

“எவ்ளோப்பா கிலோ”?

“கிலோ நாப்பது ரூபாங்க”

“ஒரு கிலோ போடு” என்றேன்.
நிறுத்துப் போடும்போது “முப்பது வச்சிக்கப்பா” என்றேன்.
“இல்லீங்க , நாப்பதுக்குக் குறையாதுங்க”

அவனிடம் பேரம் பேசி முப்பத்தெட்டுக்கு முடித்ததை மகன் பார்த்துக்கொண்டிருந்தான்.

மாலையில் துணிக்கடல். மகனுக்குப் பிடித்த வண்ணத்தில் அவனே சட்டை தேர்ந்தெடுத்தான்.
“எவ்ளோங்க” என்றேன்.
“நானூத்தி நாப்பது” என விடை வந்தது.
உடனே மகன், “நானூறு வச்சிக்குங்க” என்றான்.
“சும்மா இருடா” என்றவனை அடக்கியவன் பணம் தந்து சட்டையுடன் வெளியே வந்தேன்.
வந்தவுடன் மகன், “மாங்காக்காரன் பாவம்பா” என்றான்

One Comment on “வளவ.துரையன்/பேரம்”

  1. சின்ன வியாபாரிகளிடம் பேரம் பேசும் மக்கள் பெரு வியாபாரத்தில் பேரம் பேசுவது நாகரிகம் அல்ல என்னும் மனப்பான்மையை வளர்த்துள்ளது கேடுகெட்ட கார்ப்பரேட் கலாச்சாரம்.

Comments are closed.