
கழுதை
நாங்கள்
திருச்சியில் இருந்தபோது
கூட்டம் கூட்டமாய்
கழுதைகளைப் பார்த்ததுண்டு
பார்க்க அருவெறுப்பாக
இருந்தாலும்
சாதுவான மிருகம் கழுதை
ஒரு இடத்தில் ரொம்ப நேரம்
நிற்கும்
அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
நான் கழுதையைப் பார்த்ததில்லை
ஆனால்
மனித உருவில் கழுதையைப் பார்த்திருக்கிறேன்
(இன்று கழுதைகள் தினம். அதை முன்னிட்டு எழுதியது)

கழுதை கத்துவதையும் சங்கீதமாகக் கொள்ளும் பெரிய மனசு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? (2) மனித உருவில் கழுதையைப் பார்ப்பதாகக் கூறுகிறீர்களே, நம் விருட்சம் அன்பர்கள் யாரும் அதில் இல்லை தானே?