எல்.ரகோத்தமன்/இரு கவிதைகள்


 
1) குணம்
 
ஒரு சிரட்டையில்
பூனைக்கு பால் வைத்தேன்!
பூனை எலி பிடிக்க
சென்று விட்டது!
அங்கும் இங்கும்
பதறி ஓடிய எலி
பாலை உருட்டிவிட்டது!
துரத்திச் சோர்ந்த பூனை
தரையில் சிந்திய பாலை
அவசர அவசரமாய்
நக்கிக் குடித்தது!


09-05-2024
 
                                        *
 2) இரைத் தோற்றம்

 கூர் பார்வையில் பட்ட
இரைக்காக
விண்ணிலிருந்து
விருட்டென்று
கீழிறங்கிய பறவை
இரையால் விரித்த
வலையில் சிக்கி
தன் வானத்தை
இழந்தது!
இனி
இரை கிட்டினால் என்ன!
கிட்டாவிட்டால் என்ன!


09-05-2024