சசிகலா விஸ்வநாதன்/அட்சய திருதியை நன்னாள்

நகை அங்காடியில்
அலை மோதும் பாமரன்.

கையில் பணமின்றி
கடனுக்கு நகை வாங்கும் ஏதிலார்.

கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.

கனகத்தை மோகிப்பது ஏன்?

அட்சய தினத்தன்று
நன்மையை வளர்க்கலாமே!

ஏழைக்கு உணவிடலாம்.

இல்லார்க்கு ஒரு நூலாடை அளிக்கலாம்.

புதிதாய் ஒன்றை கற்கலாம்; கற்பிக்க லாம்.

நல் கவிதை ஒன்று எழுதலாம்

நல் நூல் ஒன்று படிக்கலாம்

நல் ஆற்றலுடன் நல்லவை விளைவிக்கலாம்.

நல்லவை வளரட்டும்
அல்லவை குறையட்டும்

அட்சய தினம் இன்று
பட்சமாய் நல் எண்ணங்கள் வளரட்டும்.


10-5-2024