
கருப்பு வண்ண
நெகிழிப்பையில்
பதியமிட்டிருந்த
கருவேப்பிலை செடி ஒன்றை
கையில் ஏந்தி
கொஞ்சம் ஓட்டமும்
கொஞ்சம் நடையுமாக
பள்ளி விட்டு
வீடு திரும்புகிறாள் சிறுமி ஒருத்தி.
முதல் முறையாக
காணக் கிடைத்தது
கொஞ்சம் ஓடவும் …
கொஞ்சம் நடக்கவும்…
வாய்க்கப் பெற்ற
செடி ஒன்றை
