நதி தரும் நெருக்கம்
கடல் தருவதில்லை
கிராமத்து ரயிலடியின் அந்நியோன்யத்தை
பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
அது உன் தோட்டம்
ஆயிரம் மலர்கள் சொரிந்தாலும்
வனம் தன் தனிமையில்
உன்னைச் சேர்த்துக் கொள்ளாது
நதி தரும் நெருக்கம்
கடல் தருவதில்லை
கிராமத்து ரயிலடியின் அந்நியோன்யத்தை
பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
அது உன் தோட்டம்
ஆயிரம் மலர்கள் சொரிந்தாலும்
வனம் தன் தனிமையில்
உன்னைச் சேர்த்துக் கொள்ளாது