புனித ஜோதி கவிதை

அந்நியநாட்டில்கருணையை சுமப்பதுகடினம் என்கிறாய்

Homeless உடன்
கண்களோடு தொடர்பு
கொண்டு பேசாதே என்கிறாய்

சிறு அச்சத்தை கைப்பைக்குள்
தூக்கிச் சுமப்பது எப்படி?

நானோ
சன்னலுக்குள்
வானத்தை வரவழைத்து
அதன் தேவையை கேட்டறிபவள்

சுதந்திரமாய் கடல்கடந்து
சென்று திரும்பும் பறவை

எப்போதும்
என் இதயமுள்
கருணையின் பக்கம் சாயும்
துலாக்கோல்

ஒளிமிக்க சொற்கள்
இருளைக் காட்டியபடிநிற்கிறது
என்ன செய்வேன்
நானோ கவிதாயினி

செ.புனிதஜோதி

New York Time square