
-
வானம் தான்
பூமிக்கு அம்மா! - அவள்
தானம் மழையமுதம்
தாய்ப் பாலாம்!
மாமலை தான்
மடுவிற்கு அம்மா! – அவள்
மார்பகத்தில் வழியு மருவி
தாய்ப் பாலாம்!
ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
நீர் நிலைகள்
சீர் நிலத்தின் அம்மா!
பாயும் மடை வெள்ளம்
பாலமுதம் அன்றோ?
பாரதத்தாய்
பன்மொழிக்கும் அம்மா! – மொழி
பலவாகி வாழ்ந்தாலும்
ஓர் அன்னை ஆனாள்!
தாய்மொழியால்
தாலாட்டும் அம்மா! – இங்கே
தாய்க்கு இணையாய் ஓர் உறவு
தரணியில் ஏதம்மா?
உலக அன்னையர் தினத்தில்
உளமார்ந்த வாழ்த்துகள்!

Arumai👏👏🙏🙇♀️