எஸ் வி வேணுகோபாலன் /அம்மா

அம்மா என்று அழைத்தது இல்லை
அம்மாவை

அந்தச் சொல் பிடிபடுமுன்
பறிகொடுத்து விட்டிருந்தேன் அவளை

ஆனாலும்
பழகிக் கொண்ட நாள் முதல்
அம்மா என்று
அழைத்துக் கொண்டே இருக்கிறேன்

தாய் என்பவள்
ஒருத்தி அல்ல

அம்மா என்பது
ஆசீர்வதிக்க மட்டுமே
அறிந்த அன்பு

அரவணைக்க மட்டுமே
தெரிந்த கருணை

ஆற்றுப்படுத்த மட்டுமே பழகிய மேன்மை

ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை

உன்னதம்
யாவும்
அம்மா

அழைத்துக் கொண்டே இருக்கிறேன்
அன்பு சுரக்கும்
உன்னதத் தாயர்
ஒவ்வொருவரையும்

சுகந்தா !
உன் நினைவில்
அம்மா என்று!

3 Comments on “எஸ் வி வேணுகோபாலன் /அம்மா”

  1. “அம்மா” ….. இது வெறும் வார்த்தை அல்ல, உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு மூலதனம்…. (அ) அஸ்திவாரம்.
    அம்மா ……நீ இல்லையேல் நானில்லையே.
    உலகம் என்றும் அழகாயிருக்க அம்மா நீ
    வேண்டும்…… என்றும்.

Comments are closed.