
அன்று காலையில் எழுந்து காப்பி அருந்தி
குளித்து ரெடியானநிர்மலா வழக்கம்போல்
அம்மாவிடம் சொல்லிவிட்டு கோயிலுக்குக்
கிளம்பி நடக்கத்துவங்கியபோது யாரோ
தன்னைத் தொடர்ந்துவருகிறமாதிரி உணர்வு
ஏற்படவே திரும்பிப்பார்த்து திடுக்கிட்டாள்.
கருப்பு நிறநாயொன்றுஅவளைத்தொடர்ந்து
வந்துகொண்டிருந்தது.அவள் நின்றதும் அது
வும் நின்றது.அவள் தன் பயத்தை மறைத்துக்
கொண்டு நடக்கத்துவங்கியதும் அதுவும் அவ
ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்
கொடுப்பாளோஎன்று எதிர்பார்த்து பின்னால் வருகிறதோ?
நிர்மலா கோயிலில் தனக்கு பிரசாதமாகக்
கிடைத்த பொங்கலை நாய்க்கும் கொஞ்சம் கொடுத்தாள்.
அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டியவாறு
இருமுறை குலைத்துவிட்டு நின்றது.
நிர்மலா கிளம்பியதும் அதுவும் தொடர்ந்து
வந்துஅவள் வீட்டுக்குள் நுழைந்ததும் ஓடிவிட்டது.
நிர்மலா நிம்மதியாக பெருமூச்சுவிட்டாலும்
மறுபடியும் நாய் அவளைத்தொடர்ந்து வருவது
நிற்கவில்லை.பிரசாதமாக கோயிலில் பூமட்டும்
கிடைத்தபோது அவள் அதைபரிதாபமகப்பார்த்தால் பரவாயில்லை
என்பதைப்போல்வாலைஆட்டிவிட்டு வீடுவரை
வந்து விட்டுவிட்டுப்போகும்.
சாப்பிட எதிர்பார்க்கவில்லை என்றால் அது
தன்னை ஏன் தொடர்ந்து வர வேண்டும்.?
இதெல்லாம் சின்னவிஷயம். இதற்காக தான்
ஏன் இத்தனை குழம்பிப்போகவேண்டும்?
தன்னைத்தேற்றிக்கொள்ள அவள் முயன்றாலும் கவலை விடவில்லை.
பல நாட்களுக்குப்பிறகு அன்று அது நடந்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறைநாள் என்பதால் சாலைவெறிச்சோடிக்கிடந்தது.
நிர்மலா கிளம்பி கொஞ்சம் நடக்கத்துவங்கியதும் நாயும் பின்தொடர்ந்தது
அப்போது…..
பின்னாலிருந்து டூவீலரில் வேகமாக வந்த இருவரில் ஒருவன்
நிர்மலாவின் கழுத்திலிருந்த சங்கிலியைஇழுத்துப்பறிக்க
முயன்றான்.
மின்னல் வேகத்தில் அவன் மேல் பின்னாலிருந்து பாய்ந்துஅவனைக்கீழே
தள்ளிவிட்டது.அத்துடன் விடாமல் அவனைக்
கடித்து காயப்படுத்தியதும் அவன் வலியில்
அலறினான்.
அப்போது தற்செயலாக அந்தப்பக்கம் வந்த
போலீஸ்ஜீப் நிறுத்தப்பட்டதைக்கண்டு டூவீலரை ஓட்டிவந்தவன்அதை வேகமாக
ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான்
நல்லவேளையாக எந்த இழப்பும் நடக்காவிட்டாலும் போலீஸ்
கீழேவிழுந்தவனைபலவந்தமாக எடுத்துச்
சென்றனர்.
நிர்மலா நாயை நன்றியுடன் பார்த்தாள்.
அது தன்னைத்தொடர்ந்து வந்ததன் காரணம்
அப்போது அவளுக்குப்புரிந்தது.
இறைவன் கொடுத்த வரம் என்பது இதுதானோ? கண்களை மறைத்த நீரை
அவசரமாக துடைத்துக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்.
