ஸ்ரீ ரமண விருந்து/சீவ.தீனநாதன்

மூன்று கேள்விகள்
( ‘…..இது எனக்குக் கேள்வித்தாள்’……)

ஒருநாள் ஒரு இளம் வங்காள வாலிபன் சில கெள்விகளை ஒரு தாளில் எழுதி பகவான் கையில் கொடுத்தான்.

பகவான் அந்தக் காகிதத் துண்டைப் படித்து வீட்டு ‘இது எனக்குக் கேள்வித்தாள்’ என்று சொல்லி அதில் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளையும் வாரித்து அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். அந்த வங்காள வாலிபன் கேட்ட கேள்விகளும் அவற்றிக்குப் சீழ்வருமாறு:

பகவான் அளித்த பதில்களும்

கேள்வி-1. நாம் கடவுளை எப்படி உருவகப்படுத்திக் கொள்வது? எப்படி நினைப்பது?
பகவான் அளித்த விடை:

நீ உன்னைப் பற்றி எப்படி நினைக்கிறாயோ, அப்படியே கடவுளைப் பற்றியும் உணரலாம்.

கேள்வி-2. கடவுள் என்பவர் யார்? அவர் எங்கிருக்கிறார்?
பகவான் அளித்த விடை:

முதலில் நீ யார்? எங்கிருக்கிறாய் என்பதைத் தெரிந்துகொள், அதன்பிறகு கடவுள் என்றால் என்ன அவர் எங்கிருக்கிறார் என்பதை நீயே தெரிந்து கொள்வாய்.

கேள்வி-3. நமது முற்பிறவிகளை எப்படி அறியலாம்?

பகவான் அளித்த விடை: இந்தத் தற்போதைய வாழ்க்கையின் குறுகிய அறிவினாலேயே, நாம் நமது அகந்தையைக் களைய முடியாத நிலையில்
கட்டுண்டிருக்கிறோம். முந்தைய ஜன்மாக்களையும் அறிந்து கொண்டோமானால் கஷ்டம் மிகவும் அதிகரிக்கும். ஏனெனில் அகந்தையின் பலம் மேலும் அதிகரிக்கும். அதனால் கடந்த காலத்தையோ வருங்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தையோ பற்றிக்கூடக் கவலைப்படாமலிருப்பது நல்லது

இங்கு பகவானது ‘ஆன்ம வித்தை’ என்ற பாடலிலிருந்து இரண்டு அடிகளை நினைவு கூர்தல் பொருத்தமாகும்.

‘தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகிலேன் தன்னை அறிந்திடில் பின் என்னை உளதறிய…’
(பகவான் அருளிய ‘ஆன்ம வித்தை’ என்ற பாடல்)