சுரேஷ் ராஜகோபால்/அம்மா

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
மனம்தொட்டு வேண்டினேன்

அறுபதை கடந்த நான்
மனிதனை வளர்ந்த எனக்கு
பின்னோக்கி பார்க்க
எனக்கொரு ஆசை

இந்நிலை மாறி
பின்னோக்கி மாற
மறுபடியும்
இளம் பிராயம் வேண்டினேன்

அங்கே நில்லாது
மிகச்சின்ன சிறுவனாக
மாறவேண்டும்

சிறுவனின் நிலைமாறி
மறுபடியும்
சிறுகுழவியாக தவழவேண்டும் .

தாய்மடி புகவேண்டும்
அதனில் மீண்டு
தாய் கர்ப்பத்தில்
நிரந்திர இடம் வேண்டும்

அங்கே நான்மட்டும்
வாழும் தனியுலகம்
எனக்காகவே வேண்டும்

நல்லவனோ கெட்டவனோ
தாய் கர்ப்பத்தில்
பேதமில்லை

எனக்கொரு ஆசை
மனம்தொட்டு வேண்டினேன்


13 04 2024

One Comment on “சுரேஷ் ராஜகோபால்/அம்மா”

Comments are closed.