
வழக்கம்போல் அவர்களுக்குள் சண்டை. எப்போதும் உச்சத்திற்குப் போகாது சண்டை.
ஆனால் இன்று உச்சத்திற்குப் போய்விட்டது.
அவள் வேண்டியத் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அவனை விட்டுப் பிரிவதற்குக் கிளம்பினாள்.
அவன் கோபத்தில் கடுகடுவென்று இருந்ததால் அவள் வீட்டைவிட்டுப் போவது குறித்துப் பெரிதுப் படுத்தவில்லை.
அந்த வீட்டை கடைசி முறையாகப் பார்த்தபடி அவள் கிளம்பிவிட்டாள்.
எங்கே போகப் போகிறாள். அம்மா வீட்டுக்குத்தான் போகப்போகிறாள் என்று நினைத்தான் அவன். கழுதைகள் கெட்டால் குட்டிச் சுவர் என்றும் நினைத்தான்.
ராத்திரி ஆனவுடன் அவள் அம்மா வீட்டிற்குப் போன் செய்தான்.
அவள் அங்குப் போகவில்லை.
