அழகியசிங்கர்/மீண்டும் விருட்சம்

நண்பர்களே,

விருட்சம் 125வது இதழ் வெளி வந்துவிட்டது.
வழக்கத்தைவிட தாமதமாக.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு இதழ்கள் வர வேண்டும்.
ஆனால் 3 இதழ்கள்தான் தயாரிக்க முடிகிறது. ஏன் இந்த நிலை என்று யோசிக்கும்போது, தாமதத்திற்கு நான்தான் காரணம் என்று தோன்றுகிறது. எப்படியாவது 2024 ஆம் ஆண்டில் நான்கு இதழ்கள் கொண்டு வர உள்ளேன்.
ராஜேஷ் சுப்ரமணியன் உதவியால் இந்த இதழுக்கு கூடுதலான படைப்பாளிகளின் அறிமுகம் கிடைத்துள்ளன.
அறிமுகப் படுத்திய அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன விருட்சம் தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 180.
வழக்கம்போல் உங்கள் ஆதரவு தேவை.
இதழ் வேண்டுபவர் Google pay number 9444113205 தொடர்பு கொள்ளவும்.