கட்அவுட்கலாச்சாரம் ஒழிக! ஒழிக!/சசிகலா விஸ்வநாதன்

கரடியாய் கத்தினாலும் யாது பயன்?

“நாய் குரைக்கிறது” என்று பகர்வர்.

செவிடன் காதில் சங்கொலி.
🪷
கட்அவுட் கலாச்சாரம்,ஒழிக! ஒழிக!

கரமுயர்த்தி கோஷம் இடும் மனிதர்;

கட்சி ஆணையிட, கட்அவுட் வைப்பார்;

தலைவர் வரும் முன்.
🪷
கட்அவுட் கலாச்சாரம், ஒழிக! ஒழிக!

வாய் வார்த்தை மட்டும், அது.

ஊர் முற்றும் கட்அவுட் இல்லாமல்

ஊர்த் திருவிழா நடக்குமா?
🪷
கட்அவுட் கலாச்சாரம்,ஒழிக! ஒழிக!

கூப்பாடு போடலாம்; நா வரள.

கூட்டம் கூடுமா கட்சிப் பேரணிக்கு;

தலைவர் கோபம் பொல்லாது.
🪷
கட்அவுட் கலாச்சாரம், ஒழிக! ஒழிக!

லஞ்ச லாவண்யம் ஒழிக! ஒழிக!

குதிரைப் பேரம், ஒழிக! ஒழிக!

தேர்தலுக்குப் பின்னரும், முன்னரும்.
🪷