எஸ்.வி.வேணுகோபாலன்/கண்ணாமூச்சிப் பறவை

தேடிக் கொண்டே இருக்க வைக்கிறது
நெடிய மரத்தின்
கண்ணைப் பறிக்கும்
பச்சைப் பசுந்தளிர்
இலைகளின் ஊடே
இப்படியும் அப்படியும்
போக்கு காட்டிக் கொண்டு
ட்விக் ட்விக் ட்விக்
என்று
குரலை மட்டும்
வெளிப்படுத்தியபடி
கண்ணுக்கு சிக்காது
இலைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டிக்
கிளை தொட்டிலை இலேசாகத்
தானே
ஆட்டி விட்டுக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடும்
குறும்புப் பறவை
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிறகடிக்கும் இசை மட்டுமே
சொந்தமாக்கி விட்டுப்
பறந்து போய் விடுகிறது
அடுத்து வேறெவர் தோட்டத்திலோ
இதே ஆட்டத்தைத் தொடர்வதற்கு!

4 Comments on “எஸ்.வி.வேணுகோபாலன்/கண்ணாமூச்சிப் பறவை”

  1. மிகவும் அருமையான கவிதை..பறவை செய்யும் சேட்டைகளை வர்ணித்த விதம் மிகவும் அருமை 👌👌👏

  2. எங்க வீட்டுத் தோட்டத்தில் காத்திருக்கிறேன். தம்பி வேணுவிற்கு கண்ணாமூசௌசி காட்டிய பறவையே..

  3. முகம் காட்டாப்பறவையை நாங்களும் சேர்ந்து தேடுகிறோம்.
    மீண்டும் உங்கள் தோட்டத்திற்கே வரும் .

Comments are closed.