ஜி. ராம்குமார்/மலையோடு

….

மலையுடனான உரையாடலை
எங்கு துவங்கி எங்கு முடிக்க

நதி
மேலே தொடங்கி
கீழே முடிக்கும்

யாத்திரிகன்
கீழே தொடங்கி
மேலே முடிப்பான்

முகட்டிலேயே
தொடங்கி முடிக்கும் மேகம்
அடிவாரத்திலேயே பலர்

மாரியில் தொடங்கி
கோடையில் முடிக்கும் மரம்

வேரில் தொடங்கி
பூவில் முடிக்கும் மரம்

காலையில் தொடங்கி
மாலையில் சூரியனும்
மாலையில் தொடங்கி
காலையில் நிலவும்

முதல் வரியில் தொடங்கி
இங்கே முடிக்கிறேன் நானும்.

4 Comments on “ஜி. ராம்குமார்/மலையோடு”

Comments are closed.