
பூசணிக்காயை இரண்டாய்ப்பிளந்து
சிற்பி போலே செதுக்கிச் செதுக்கி
அலங்காரமாய் அமர்த்தி வைத்து
அதனருகில் தர்பூஸ், கோஸ்
கேரட், பீட்ரூட்
புடலங்காய், குடமிளகாய்
வெள்ளரிக்காய், தேங்காய் என
விதவிதமாய் காய்கறிகளை
வகைவகையாய் வடிவமைத்து
அலங்காரமாய் வைத்தார்
கல்யாண ரிசப்ஷனிலே.
பட்டுப்புடவை, பட்டு வேட்டியில்
வந்த விருந்தினரெல்லாம்
வாய் பிளந்து அதிசயித்து
அருகில் நின்று செல்ஃபி எடுத்து
மகிழ்ச்சி பொங்க நின்ற வேளை
சற்றுத் தள்ளி நின்ற ஒரு
நோஞ்சான் சிறுவன்
வேலைக்காரியின் ஆசை மகன்
ஒட்டிய வயிறும், உலர்ந்த வாயுமாய்
எச்சில் ஒழிக எட்டிப் பார்த்தான்
அலங்காரத்துக்கு
நறுக்கி வைத்த காய்கனிகளை
