
கவிதை எண் 1
*
பத்து நிமிடத்தில் ஒரு கவிதை தா என்றார்/
சட்டென யோசித்தேன்
மனதிடம் யாசித்தேன்
கவிதையும் வந்தது
கவலையும் தீர்ந்தது
உள்ளத்துக்கு வெளியே நிழலாடுது/
உள்ளமெல்லாம் சதிராடுது/
யாரந்த அழகி, மௌனமே தேடியது/
மௌனமாக தேடியது.
மோன நிலையில் எனை மறந்தேன்/
அவள் புன்னகைக்கு காத்து நின்றேன்
கனவினில் எதுவும்
சாஸ்வதமில்லை.
நிதானமாக எந்நிலை திரும்பினேன்
நானாக நானிருக்க முயன்றேன்
இல்லை, இனி முடியாது/
விருப்புடன் ஓய்ந்து விட்டேன்.
*
கவிதை எண் 2
நனைந்தேன்
*
மாலை
வீடு திரும்பிய போது
மெல்லத் தூரல்
நனைந்தேன்
மித மழையானது
நனைந்தேன்.
கன மழையானது
நனைந்தேன்
மிகப் பெரிய மழையானது
நனைந்தேன்.
வீட்டில் நுழைந்தேன்
மழை அறவே நின்றது.
கனமான இடிகள்
கை கொட்டிச் சிரித்தன
நானும் சிரித்தேன்.
