
(அறிவு ஜீவி சுஜாதா வாசகர்கள் குழுவால் முகநூலில் பதிவானது)
(மீண்டும் தூண்டில் கதைகள் தொகுப்பு)
கம்ப்யூட்டர் சாமியார் என்றும், ஹைடெக் யோகி என்றும் அழைக்கப்பட்ட சுவாமி நவநீதானந்தா, ஜலத்தின்மேல் நடக்கப் போகிறாரென்ற செய்திக் குறிப்பு ‘தினநேசன்’ பத்திரிகைக்கு வந்திருந்தது.” இதை எழுதுகிறாயா?” என்று எடிட்டர் சோமசேகர் கேட்டபோது. காவ்யாவுக்கு உற்சாகமாகவும் தயக்கமாகவும் இருந்தது.
சுவாமியைப் பற்றி அவரது வெப் சைட்டில் பார்த்தது பிரமிக்க வைத்தது.’பாப்’ பாடகிகளிலிருந்து அணு விஞ்ஞானிகள் வரை அகிலமெல்லாம் சிஷ்ய கோடிகளாம். வருஷத்தில் ஒன்பது மாதம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் என சுற்றிவிட்டு இந்தியா திரும்பும்போது சென்னைக்கு ஒரு மாதம் வருவாராம். ‘நவநீத் மிஷனுக்கு டோக்கியோவிலிருந்து ட்ரினிடாடு வரை கிளைகள் இருப்பதாகவும் அறிந்தாள்.
“சென்னை வரும்போதெல்லாம், நாரதகான சபாவில் காலையில் அவர் தரும் கீதை சொற்பொழிவுகளில், அரங்கம் நிரம்பி டி.டி.கே.ரோடு சிக்னல் வரை கார்கள் நிற்கும்” என்றார் சீனியர் ரிப்போர்ட்டர் ராகவாச்சாரி.
“இருக்கிற பிரசித்தி போறாதா. இவர் எதுக்கு ஜலத்தில் நடக்கணும். சாரி மாமா?”
“நடந்துட்டுப் போறார்.உனக்கென்ன ஜீஸஸ் லிஸார்டுன்னு ஒரு பல்லிகூட ஜலத்தில் நடக்கிறது. சிலந்தி நடக்கிறது”ராகவாச் சாரி தகவல் களஞ்சியம்.
“இவருக்கு வித்தைகள் தேலையில்லையே!”
”வாஸ்தவம்தான். முன்னெல்லாம் வாயிலிருந்து லிங்கம் காத்திலிருந்து சுமவ புஷ்பம்,விபூதி எல்லாம் வா வழைச்சுண் டிருந்தார். இப்போ அவரது சொற்பொழிவுகளில் தெளிவும் ஆன்மிக ஆழமும் வந்தாச்சு. தந்திரங்கள் எதும் தேவையில்லை தான்… “
”மாமா நான் இதை எப்படி ரிப்போர்ட் பன்றது?”
“என்ன ப்ராப்ளம் உனக்கு?”
“ஜலத்திலயாவது நடக்கறதாவது. பக்வாஸ்.”
“அப்படி முன்தீர்மானமில்லாமல் போய்த்தான் பாரேன். ‘நிலத்தில் குளித்து நெடு விகம்பேறி ஜலத்தில் திரியுமோர் சாரணர்’னு இந்தச் சித்திகளை, ‘ஜைனர்களும் பெளத்தர்களும் செய்ததா மணிமேகலைல சொல்லியிருக்கு.எல்லாம் அபத்தம் ஏமாத்துன்னு உன்னால நிரூபிக்க முடிஞ்சா. சாட்சியங்களோட எழுது. இல்லை, அந்த மகானை, கேள்வி கேளு. ஏன் சாமி ஊரை ஏமாத்தறீங்க?’ன்னு கேலி பண்ணாதே .”
“அய்யோ மாமா நான் ஒரு குட்டி ரிப்போர்ட்டர்.”
“இதெல்லாம்தான் அனுபவம்.”
காலை என்.டி.டி.வி. பேட்டியில் சன்கன்களின் பளிச்சில் தன் முன் நீட்டப்பட்ட இருபத்தைந்து மைக்குகளில் சுவாமி நிதான மாகப் பேசினார்.
“ஆழ்மனதைக் கட்டுப்படுத்தினால் உடலைக் கட்டுப்படுத்த முடியும்,என்கிறது கீதை. பகவான் இதை ஸ்திதப்ரக்ஞை என்கிறார்.”
”சுவாமி, யாராலும் தண்ணீர் மேல் நடக்க முடியாது என்று சொல்கிறார்களே?”
“சுவாமி சிரித்தார். ஏன்?”
”சுவாமி நீர் மேல் நடப்பது என்பது இயற்கை விதிகளுக்கு முரணான காரியமல்லவா, இயற்பியல் விதிகளை மனித் சாஸ்திரத்தில் யாரும் மீறினதில்லையே?”
“கௌதம புத்தர் தன் தந்தை சுத்தோதனருக்குச் செய்து காட்டியிருக்கிறார். ஜென் குரு சொன்னது போல், மனத்தைக் காலி பண்ணிவிட்டு வா. மீறிக் காட்டுகிறேன். இயற்கைக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்று ஒப்புக்கொள்வாயா?”
“உலகமே ஒப்புக்கொள்ளும். நான் ‘டைம்’ பத்திரிகையிலிருந்து வருகிறேன்.”
“என்னால் காத்திலும் நடந்து செல்ல முடியும். “என்றார்.
விவாதம் சட்டென்று, கவாமியின் திடீர் அறிவிப்பால் களை கட்டியது. ‘இன்று கம்ப்யூட்டர் சாமியார் நீர்மேல் நடக்கிறார்” என்று, அடி உயர எழுத்துக்களில் ‘மாலை நேசன்’ அறிவித்தது.
இருள் வரும் மாலை. பெரியார் திடலிவ் ஆர்க் லைட்களில் பிரமிப்பில், உலகின் பல்வேறு சானல்களிலிருந்தும் காமிராக் காரர்கள் குவிந்து விட்டனர். இங்கர்சால் பகுத்தறிவு இயக்கத்தின் தலைவரும் சிந்தனையாளருமான ரமேஷ் கஸ்தூரியாவைத் தனிப்பட்ட முறையில், அந்த அதிசயச் செயலை அருகே இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். நகர கமிஷனர், துணைவேந்தர், முன்னணி நடிகர், பாடகர் போன்ற பல பெரிய மனிதர்கள் முன்னிலையில், நவநீத் மிஷனின் சர்வதேச அமைப் பின் செயவாளர் கொன் சாலெஸ் வந்திருந்தார். லண்டனிலிருந்து கால்பந்தாட்டக்காரரும் சீடரும் ஆன மார்க் டைவர் வந்திருந்தார்.
காவ்யா போனபோது, “என்ன மேடம் இவ்வளவு லேட்டா வர்றீங்க. கூட்டத்தைப் பாருங்க. இடம் கிடைச்சா அதிர்ஷ்டம். ப்ரெஸ் பாசை காட்டிக்கிட்டே போங்க. எல்லா கேட்டும் மூடியாச்சு.”
காவ்யா சட்டையும் ஜீன்ஸும் அணிந்த இளம்பெண் என்ப தால், மக்கள் அளித்த சலுகையினால் கிட்டே போக முடிந்தது. கூட்டம் மூச்சிறுக்கியது. சுவாமி சாந்தமாக, உயர்ந்த மேடை மேல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கறுமையான கேசங்கள். அருவி போல் தோளின் இருபுறமும் வழிந்தன. மெல்லிய காவி நிறத்தில் போர்த்தியிருந்தார். அவர் பாதங்கள் வெள்ளை முயல்கள் போலத் தெரிந்தன. சதா புன்னகை… தோற்றத்தில் காந்த சக்தி. இவர் கையைப் பிடித்துக் கொண்டு பனி மலைகளில் நடக்கலாம். பாலைவனங்களைக் கடக்கலாம் என்று தோன்றியது காவ்யா வுக்கு. அவர் தன்னையே பார்ப்பது போலத் தோன்றியது. பன்னாட்டு சிஷ்யர்களில் ஒருவரை அழைத்து, காவ்யாவைச் சுட்டிக் காட்டினார். இவளுக்குக் கை வியர்த்தது.
ஒரு செங்கூந்தல் சிஷ்யை ஸ்பானிஷ் உச்சரிப்புடன் “கம், ஸ்வாமி வந்த்ஸ் யு இன் தெய்ஸ்” என்றாள். காவ்யா கிட்டே
போய் பின் வரிசையில் உட்கார்ந்தாள். மேடை மேல் ஒரு நீண்ட
பெரிய தொட்டியை நான்கு பேர் கொண்டு வைக்க, அதில் ஒரு ஓஸ் பைப்பிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்ட போது, இனிய கீதங்கள் பல மொழிகளில் ஒலித்தன. சுவாமி புன்னகை மாறாமல் தாளம் போட்டு சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அடிக்கடி காவ்யாவை அவர் பார்க்கும்போது, அவளுக்குள் குறுகுறுத்து இதயம் ஒரு துடிப்பு தடுக்கியது. காமிராக்காரர்கள், டி.வி. பத்திரிகைக்காரர்கள் அனைவரும் மேடையருகே, தம் சாதனங்களுடன் ஆவலால் தீட்டப்பட்ட நரம்புகளுடன் காத் திருந்தார்கள். அவ்வப்போது, அங்கங்கே ஃப்ளாஷ் சிமிட்டியது. நீர் நிரம்பி மேடையில் வழிந்தது. தொட்டியின் அருகே தற்காலிக மாக சின்ன படிக்கட்டு வைக்கப்பட்டது.
நிருபர்கள் சிறுசிறு டேப் ரிக்கார்டர்களை நீட்ட, சுவாமி எஃப்எம் மைக்கில் தெளிவான ஆங்கிலத்தில், லேசான மலையாள உச்சரிப்புடன் இவ்வாறு பேசினார்.
“நீர்மேல் நடப்பது பெரிய வித்தையில்வை கிராமப்புறங்களில் தீமிதி பார்த்ததில்லையா? மனிதனால் பஞ்சபூதங்களிலும் செல்ல முடியும். நிலத்தில் அனைவரும் நடக்கிறோம். நெருப்பில் சிலர் நடக்கிறார்கள். ஆகாயத்தில் நம் விண்வெளி வீரர்கள் நடச் கிறார்கள். அதுபோவ், நீரிலும் என் போன்றவரால் நடக்க இயலும். இன்று அதைப் பார்க்கப்போகிறீர்கள். நடக்கலாம். தேவைப்பட்டால். காற்றில் நடப்பதை மற்றொரு சமயம் செய்து காட்டுகிறேன். இப்போது உன்னிப்பாகக் கவனியுங்கள்.”
அந்த இடம் சட்டென்று சந்தடி ஒடுங்கி. மெளனத்தில் ஆழ்ந்தது. சுவாமி நவநீதானந்தா காவ்யாவை அழைத்தார். அவள் தோளைப் பற்றிக் கொண்டு தொட்டியின் விளிம்புக்கு வந்து
நின்றார். மரப்படியில் ஏறினார். தொட்டியில் ஜலம் நிரம்பி தத்தளித்தது.
சுவாமி காவ்யாவிடம் தன் கைத்தடியைக் கொடுத்து ஆழம் பார் என்றார். திகைத்துப்போய் அதை ஓடக்காரன் போல் உள்ளே செலுத்தினாள். “ஐந்தடியாவது ஆழம் இருக்குமல்லவா?” என்று மைக்கை அவள் முன் யாரோ நீட்ட.
‘”ஆம் சுவாமி.”என்றாள் ஹீனஸ்வரத்தில்
”சாட்டிஸ்ஃபைடு? கமிஷனர் சார் வாங்க.”
அவரும் ஆழம் பார்த்தார்.
சுமார் எட்டடி நீளமும், மூன்றடி அகலமும், ஐந்தரை அடி ஆழமும் இருந்த தொட்டியில், தெளிவான ஜலம் நிரம்பியிருந்தது. சுவாமி, அந்த ஜலத்தின் மேல்பரப்பில் கால் வைத்தார். நடந்தார்.
நிதானமாக நடந்தார்.
தொட்டியின் மறு விளிம்புக்குச் சென்று, காவ்யாவிடமே திரும்பி வந்தார். அவள் தோளைப் பிடித்துக் கொண்டு படியிறங் கினார். ஒரு நிமிடத்தில் பக்வாஸ், லெஸிம், மணி, கிண்கிணி போன்ற வாத்தியங்கள் உச்சகட்டமாக வேகம்பெற்று ஆர்த்தன.
சுவாமி மேடையில் இருந்த அதிகாரிகளைக் கைகுலுக்கினார். டிவி.காமிராக்காரர்கள் தொட்டியைப் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். படம் பிடிக்க
ஈரமான மேடையில் அவர்கள் வழுக்கி விழாமல் வாலண்டி யர்கள் பார்த்து அழைத்துச் சென்றனர்.
நீரைக் கவிழ்த்துக் கொட்டிய பின் தொட்டியை மேடையி லிருந்து நீக்கி சீடர்கள் தனியாக வைக்க, அதை பத்திரிகை யாளர்கள் பார்வையிட்டார்கள்.
“இட்ஸ் அன்பிலிவபிள் நம்பவே முடியலை”என்றாள் காவ்யா.”
“எப்படி சாத்தியம். இந்த விஞ்ஞான யுகத்தில்?”
“தொட்டியைச் சரியா பாத்தியா?”
“பார்த்தேன். சாரி சார்.”
“கண்கட்டு வித்தையா இருக்கும்.
“அப்படின்னா?”
“மேஜிக் நிபுணர்கள் செய்யறது. அசந்து மறந்த கணத்தைப் பயன்படுத்தி, நிமிஷமா ஏய்க்கிறது.”
“என்ன சார் கண்ணால பார்த்தேன். அவர் கைத்தடியைக் கொடுத்தார் உள்ளே விட்டு ஆழம் பார்த்தேன். கமிஷனர் பார்த்தார். நடிகர் பார்த்தார். மேயர் பார்த்தார். அத்தனை பத்திரிகைக்காரர்களும் பார்த்தாங்க.”
“எப்படி இருந்தது நடை? அதை வர்ணி.”
“ஒரு மாதிரி ஃபேஷன் மாடல்கள் ரேம்ப் வாக் மாதிரி அடிமேல் அடி வைத்து நடந்தார்.”
“வேகமாகவா?”
“இல்லை நிதானமா.”
“அதுல எதாலது சூட்சுமம் இருக்கும். தண்ணி எப்படி இருந்தது?”
“சாதாரண குழாய் தண்ணி.”
”சரி. இப்படி எழுது காவ்யா, ‘சுவாமி பார்வையாளர்களிடம் தண்ணீரில் நடப்பதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்தினார்.”
“தோற்றம் இல்லை மாமா அது. நடந்தார் பார்த்தேன்.
“அதைத்தான் எழுதப்போறேன்.”
“என்ன சொல்லிருக்கேன் காவ்யா? கண்ணால் காண்பது மெய்யல்ல.”
“தெரியும். தீர விசாரிப்பதே மெய்னு, லத்திருந்த எல்லாரையும் விசாரிச்சேன்.”
”ஒரு விஞ்ஞானியைக் கேள். தொட்டியைத் தட்டிக்கொட்டிப் பாரு. புத்தர், ஏசுநாதருக்கு அப்புறம் இந்த அற்புதச் செயலை யாரும் செய்ததில்லை. சாய்பாபாகூட தண்ணில நடந்ததில்லை. இரண்டாயிர வருஷ சிந்தனையை. ஒரு சாயங்காலத்தில ரத்து செய்ய முடியாதுன்னு எழுது. பிரபஞ்சம் ஆரம்பமான காலத்திலிருந்து இருக்கிற கருணையில்லாத புவி ஈர்ப்பு விதியை, ஒரு சாமியார் மீறிட்டார்னு எழுதாதே. வேற ஏதாவது ட்ரிக் இருக்கும். உன்னால் கண்டுபிடிக்க முடியலை அவ்வளவுதான்.”
காவ்யா ஆஸ்டலுக்குத் திரும்பு முன், சங்கீதாவில் இட்லியும் ஸால்ட் லஸ்ஸியும் ஆணையிட்டாள். ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சங்கடமாக உணர்ந்தாள். இவனை எங்கே பார்த்திருக்கிறேன்? முப்பது வயதிருக்கும். டை கட்டி யிருந்தான். அப்போதுதான் குளித்தது போல ராத்திரியிலும் தூய்மையாக இருந்தான். காவ்யாலைப் பார்த்துப் புன்னகைத் தான் .
மற்ற இடங்கள் காலியிருந்தும் அவள் மேசைக்கு வந்து உட்கார்ந்தான். “ஹாய்… ஐம் ப்ரவீண்! மஹாஜனுக்கு எந்த உறவும் இல்லை. யூ மஸ்ட்பி காவ்யா தினநேசன்.”
“ஹாய் ப்ரவீண்!” தொழிலில் இம்மாதிரி பலரைச் சந்தித்திருக் கிறாள். சமாளித்திருக்கிறாள்.
கார்டு கொடுத்தான். “ப்ரவீண் குமார் ஐ.எஸ்.ஏ. கிளாஸ்” காவ்யா தன் பையில் விசிட்டிங் கார்ட் தேடினாள். “ஸாரி தீந்து போச்சு.”
“தேவையில்லை. உங்களை கவாமி பக்கத்தில் பார்த்தேன்.”
“நீங்களும் வந்திருந்தீங்களா?”
”நான் இல்லாமயா?”
”ஓ. பக்தரா, சிஷ்யரா?”
“நோநோ…ஒரு ப்ளேட் இட்லி ஒரு லஸ்ஸில உயிர்லாழ முடியும்ங்கறீங்க? அதான் இல்வளவு ஸ்லிம்மா இருக்கீங்க.” வெய்ட்டரிடம் ஒரு ட்ரை ஃப்ரூட்ஸ் ரவாப்பா” என்றான்.
”நீங்க நாளைக்கு இந்தச் செய்தியை எப்படி எழுதப்போறீங்க காவ்யா?”
“பாத்ததை எழுதுவேன்.”
“என்ன பாத்தீங்க?”
“சுவாமி தண்ணி மேல நடக்கிறதை நிச்சயமா பார்த்தீங்களா?”
“நான்தான் கிட்ட இருந்தேனே.”
“காவ்யா இது முழுக்க ஒரு ஏமாற்று வேலை.”
“எப்படிச் சொல்றீங்க?”
“சுவாமி நடந்தது ஜலத்தின் மேல இல்லை.”
“பின்ன?”
“எங்க கம்பெனி கண்ணாடி மேல உன்னிப்பா பாத்தாக்கூட தெரியாம நடுவில இருந்த குறுகலான கண்ணாடிப் பாதையில நடந்திருக்கார். ஃபேஷன் மாடல் போல அடிமேல் அடிலச்ச எதுக்கு நடந்தார்? காரணம் பாதை குறுகல்!”
சால்யாவுக்கு அதைக் கிரகிக்க சற்று நேரமாயிற்று. “எப்படி
ப்ரவீண்! நாங்க எல்லாரும் பாத்தமே. தெரியவே இல்லயே?”
“தெரியாது! அதுதான் எங்க கண்ணாடியுடைய மகிமை!”
“உங்க கண்ணாடியா?”
”ஆமாம் எங்க ஃபாக்டரி; ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில இருக்கு. எல்லா நாடுகளுக்கும் எக்ஸ்போர்ட் பண்றோம் இந்தியாவில் உள்ள அத்தனை கார்களுக்கும் விண்ட்ஷீல்டு சப்ளை செய்ய றோம்.ஓட்டல் வாசல்களில் எங்க கண்ணாடியால மூக்குடைஞ்ச வங்க பலபேர்! சதவுகள் அலமாரிகள்ன்னு எல்லா வகையான கண்ணாடிக்கும் எங்க ஐ.எஸ்.ஏ. கம்பெனிதான் நம்பர் ஒன்.
மெலிசான வலுவான கண்ணாடி ஸ்ட்ரிப் ஒண்ணை நவனீத் மிஷன்ல ஆர்டர் பண்ணாங்க நான்தான் அறுத்துக் கொடுத்தேன். இப்படிப் பயன்படுத்துவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. மனசாட்சி சேக்கலை. அதனால உங்ககிட்டயாவது ரகசியத்தைச் சொல்லிட்டேன். இல்லைன்னா, என் மண்டை வெடிச்சிடும் ப்ரவீண் எழுந்தான்.
“தொட்டியைக் கவுத்துக் காட்டினாங்களே நாங்க எல்லாரும் பாத்தமே.”
“எல்லாரும் தொட்டியைப் பார்த்திங்க, மேடை மேல ஈரத்தோட ஈரமா நழுவின கண்ணாடியைப் பார்த்திருக்க மாட்டீங்க.”
“நான் இதை ரிப்போர்ட் பண்ணலாமா?”
“தாராளமா… ஆனா என் பேரை, எங்க கம்பெனி பேரை மட்டும் போடாதீங்க என் வேலை போயிரும். நீங்களே கண்டு பிடிச்சதா போடுங்க. எதுக்கும் மிஷனுக்கு போன் செய்து கேட்டுருங்க. அவங்க டிளே பண்ணாலும் அதையும் நீங்க போடணும் ப்ளீஸ்,”
”எதுக்கு என்கிட்ட சொன்னீங்க, பேப்பர்ல போடத்தானே?”
“அய்யோ வம்பா போச்சே… மறந்துருங்க. நான் உங்களைப் பார்க்கவே இல்லை; பேசவே இல்லை. பத்திரிகைகாரங்ககிட்டே பேசறப்ப ஜாக்கிரதையா இருக்கணும் பெரியப்பா சொல்வார்.”
காவ்யா சிரித்து,”பயப்படாதீங்க! உங்க வேலை போகாதபடி எழுதறேன். எங்களுக்கும் ஒரு தர்மம் இருக்கு”
“இப்பவே திக்கு திக்குங்கறதுங்க. என்ன எழுதப் போறிங் களோ “
“நாளைக்குப் பாருங்களேன்!”
”அய்யோ அவசரக்குடுக்கை. உனக்கெல்லாம் எதுக்குடா மனச்சாட்சி!”
“பயப்படாதீங்க…
”தங்கைக்கு லோன் வாங்கி இன்ஜினியரிங்ல சேர்ந்திருக்கேன் காவ்யா! வேலை போச்சுன்னா செத்தேன்.”
ராத்திரியே மிஷனுக்கு போன் செய்தபோது சுவாமி அமெ ரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், அக்டோபரில் திரும்பி வருவார் என்றும் தகவல் வந்தது. மனசு கனத்து குழப்பத்தில் தவித்தது. எதை நம்புவது… அற்புதச் செயலையா, அறிவியலையா? ராகவாச்சாரி உலகக் கோப்பை கால்பந்து பார்த்துக் கொண் டிருந்தபோது, போன் செய்தாள், “மன்னிச்சிக்குங்க மாமா, புதுசா ஒரு டெவலப்மெண்ட்” -ப்ரவீணைச் சந்தித்ததை விவரித்தாள்.
“கார்டு கொடுத்தானா?”
“ஆமாம்! ஐ.எஸ்.ஏ.னு பெரிய கிளாஸ் கம்பெனில வேலை செய்யுறான்.”
”ஓ! ஐ.எஸ்.ஏ… ஸென் கோபெய்ன் மாதிரி பெரிய கம்பெனி தான். உனக்கு என்ன தோண்றது..?”
“சந்தேகத்தை விதைச்சுட்டான்.”
“அப்ப இப்படி ரிப்போர்ட் பண்ணு… ‘நீரின் மேல் நடத்தாரா. பிரபல கம்பெளி கண்ணாடி மேல் நடந்தாரா?” என்பது. சுவாமி அடுத்த முறை இதை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ செய்து காட்டும் போது. இன்னும் உன்னிப்பாகக் கவளித்து விடை கொடுக்கப்படும். இறுதியில் வெல்லப்போவது அறி வியலா? அற்புதச் செயலா? என்பது தீர்மானமாகிவிடும்.”
மறுதினம் அவள் எழுதியது தினநேசனில் தலைப்புச் செய்தியாக வந்தது. “தண்ணீரா கண்ணாடியா?”
பல் விளக்கிவிட்டு பார்க்கில் நடைபயில வெளியே
வந்தபோது, ஹாஸ்டல் வாசலில் ப்ரவீண் காத்திருந்தான். கையில்
மலர்க்கொத்து,அருகே ஸாண்ட்ரோ கார்.
“கங்ராட்ஸ்! பின்னிட்டிங்க எங்க பேரைப் போடாம
காப்பாத்திட்டிங்க, அருமையா நடுநிலை மாறாம எழுதிட்டிங்க
உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கு கம்பெனி காரை எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்.நீங்க என் ஃபேமிலியை மீட் பண்ணியே ஆகணும்.”
”எதுக்கு?”
“சும்மா சின்னதா ஒரு கர்ச்சீஃப் போட்டு வெக்கலாம்னு”
காவ்யா எழுதியதைத் தொடர்ந்து தேசிய பத்திரிகைகள் இதைப் பெரிதுபடுத்தின. ‘இண்டியா டுடே’யில் ஒரு அட்டைப் படக் கட்டுரை – God of Fraud? வந்தது.
தேசிய சானல் ஒன்று தன் நிருபரை சிஷ்யைபோல் அனுப்பி. மறைமுக கேமரா மூலம் ஆசிரமத்தின் ஓரத்தில் ஒரு மகிந்த்ரா வேனில் துணியால் மூடிவைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாளத்தைப் படம் பிடித்துக் காட்டியது.
மற்றொரு நிருபர் அந்தக் கண்ணாடியைச் சப்ளைசெய்தது ஐ.எஸ்.ஏ. கிளாஸ் என்பதை இன்வாய்ஸ் ஆதாரத்துடன் அறிவித்தார்.
சுவாமியின் நவனீத் மிஷன்மேல், அதை இழுத்து மூட வேண்டும்! என்றும், அதனுள் நடக்கும் நிழலான சமாசாரங்களை ஓய்வு பெற்ற நீதிபதி யாராவது விசாரிக்க வேண்டும்’ என்றும். ஒரு பி.ஐ.எல் -பொதுநல வழக்கு போடப்பட்டது. அடுத்த மாதத்திற்கு ஒத்திப் போடப்பட்டது.
இதனால் மிஷன் மகத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. சுவாமி அமெரிக்காவிலிருந்து திரும்ப வரும்போது ஏர்போர்ட்டி லேயே கைது செய்யப்படலாம் என்று செய்தி வந்தது.
ப்ரவீண். காவ்யாவை மறுபடி சந்தித்தபோது. சோக முகத்துடன் இருந்தான் “என்னங்க நீங்க ஆரம்பிச்சது பெரிசா பூதாகாரமா நேஷனல் லெவலுக்குப் போயிருச்சு. என் வேலை போகப்போறது. காஷன் மெமோ கொடுத்துட்டாங்க. டிப்பார்ட்மெண்டல் என்க்வைரி வக்கிறாங்க. யார் கிட்டயாவது எங்க கம்பெனி பேரைச் சொன்னீங்களா காவ்யா?”
“இல்லை. பிரவீண்”
”பின்ன எப்படி நான்தான் தகவல் சொன்னேன்னு போட் டிருக்காங்க?”
‘பிரஸ்கிட்டருந்து எதையும் மறைக்க முடியாது ப்ரவீண்
“நல்லா வேணும் எனக்கு. என் தலையெழுத்துப்படி நடக்கட் டும். கண்ணாடி விக்கிறதுக்கு உங்க ஆபீஸ்ல வேலை ஏதாவது தருவாங்களா?”
“ஐயோ எல்லாத்துக்கும் ஆதி காரணம் நான்தான்.”
”நீங்க இல்லைங்க. நான் மனசாட்சியை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கணும். எதுக்கு உங்க கிட்ட சொல்லணும். எத்தனையோ பேர் எத்தனையோ ஏமாத்தறாங்க!”
“விரக்தியா பேசாதீங்க. உங்க நல்ல மனசுக்கு வேற வேலை நிச்சயம் கிடைக்கும்!”
“பீட்ஸா விக்கலாம்னா. டூவீலர் லைசென்ஸ் கிடையாது?”
“ஐயோ, புலம்பாதீங்க!”
“எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்து எங்கம்மாகிட்ட பேசினிங் கன்னா, அதைப் பாக்கியமா நினைச்சுப்பேன்.”
“வரேனே..” என்றாள்.
அவன் கண்கள் குளமாயின
சாயங்காலம் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். போரூர் அருகே பெரிய வீடு.
“கம்பெனி வீடுங்க. இன்னும் ஒரு மாசம்… ஹூம்!”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க உங்க நல்ல மனசுக்கு ஏதும் கெடுதல் நடக்காது.!”
காபி நன்றாக இருந்தது, ப்ளஸ் டு தங்கை அவனைத் தொட்டுத் தொட்டுப் பேசினாள். ப்ரவிணின் அம்மா இளமையாக இருந்தாள்.
“அம்மா இதான் காவ்யா! நான் சொல்லலை?”
“என்ன சொன்னீங்க ப்ரவீண்?”
”ஒண்ணுமில்லை” என்றான் அவசரமாக.
“உன்னைப்பத்திதான் நாலு நாளா பேச்சு. கிளாஸ் கம்பெனில் நல்ல வேலைல இருக்கான். உங்கப்பா அம்மா அட்ரஸ் குடு. நீங்க என்ன கோத்திரம்?”
”எனக்கு அந்த விவரம் தெரியாது மாமி. அப்பா அம்மாவுக்குத்
தான் தெரியும்.”
”ஏம்மா… உன் நட்சத்திரம் என்னன்னு கூட தெரியாதா?”
“மகம்னு நினைக்கறேன். எதுக்குக் கேக்கறீங்க?”
“எதுக்குக் கேப்பா?”
“காவ்யா நல்ல ட்ராயிங் போடுவா” என்று பேச்சை மாற்றினான் ப்ரவீண்.
“ஜெயலலிதாகூட மகம்தான். மகம் ஐகத்தை ஆளும்பா.” ப்ரவீண். “அம்மா வந்திருக்கறவாளை தொண தொணங்
காதே!” “உங்ககிட்ட நான் ஒருவிதத்தில மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேம்மா. நான் எழுதின ரிப்போர்ட்டால…”
ப்ரவீண் அவளைத் தனியாக அழைத்து, “ஆபீஸ் சமாசாரம் எதும் அம்மாவுக்குச் சொல்லலை” என்றான்.
“ரொம்ப பதட்டப்படுவா!”
”உம் மாதிரி பொண் கிடைச்சா ப்ரவீணுக்குப் பெரிய அதிர்ஷ்டம்” என்றாள் தாய்.
“கிடைப்பா மாமி!”
“உங்கப்பாம்மா அட்ரசாவது சொல்றியா…
“அடுத்த வாரம் வரப்போறா, கூட்டிட்டு வரேன் மாமி” என்று சமாளித்தாள்.
பிரவீண் அவளைக் காரில் கொண்டு விடும் போது, “நீங்க விட்டேத்தியாகப் பேசறதில ஆச்சரியமில்லை. காவ்யா. எனக்கு வேலை போய்டும், அதனாலேயே!”
“அய்யோ! அப்படியெல்லாம் எதுவும் நடக்காது” என்றாள். அவன் மேல் பரிதாபத்துடன் அவன் நீட்டிய கையைக் குலுக்கி, “குட்பை” என்றாள்.
“வேலையை விட்டுறப்போறியா? உனக்கு என்ன பைத்தியமா?” என்றார் சரி.
”இல்லைன்னா என்னை ரிப்போர்ட்டிங்க்லிருந்து தூக்கிடுங்க சார்.”
”ஏம்மா?”
“என்ன நல்ல ஃபேமிலி. நான் கொடுத்த ரிப்போர்ட்னால் வேலை போகப்போறது ப்ரவீணுக்கு.
“நீ என்ன செய்வே. அவனா வந்து சொன்ன மேட்டரைத் தானே எழுதினே. இன்வெஸ்டிவ்கேட்டிவ் ரிப்போர்ட்டிங்னா அப்படித்தான்.”
“சார் எடிட்டர்கிட்ட சொல்லி, அந்த ஐ.எஸ்.ஏ. கம்பெனி மேனேஜருக்குப் பேசி ஏதாவது செய்ய முடியுமா பாருங்களேன்.”
“நான் எடிட்டர் கிட்ட கேக்கறேன். அந்த கம்பெனி எம்டி இவருடைய கால்ஃப் பார்ட்னர்னு ஒரு தடவை சொல்லியிருக்கார். அதுக்கு முன்னாடி அலனுக்கு லேலை போகப் போறதான்னு தெரிஞ்சுக்கலாம்.”
மறுநாள் காலை சாரி போன் செய்தார்…
“ஹிந்து பாத்தியா?”
“இல்லையே ஏன்?”
“கடைசிப் பக்கத்தைப் பாரு முதல்ல… ஒரு முழுப் பக்கத்துக்கு விளம்பரம் வத்திருந்தது. சுவாமி தண்ணீர் மேல நடக்கும் போட்டோவைப் போட்டு,
“அவர் நடந்தது எங்கள் மேல்!”
ஐ.எஸ்.ஏ. க்ளாஸ் ஒர்க்ஸ்,
ஸ்ரீ பெரும்புதூர்.
“பாத்தியா?”
‘புரியலை. சாரி சார்.”
“இந்த கேம்பெய்ன் முழுக்க ஏற்பாடு பண்ணது யார் தெரியுமா?”
“தண்ணில நடக்கறது… ப்ரெஸ். டி.வி. ரிப்போர்ட்.. கண்ணாடின்னு. கண்டு பிடிக்கிற ஸ்கூப்… எல்லாமே திட்டம் போட்டது மிஸ்டர் ப்ரவீண் குமார், அவன்தான் மார்க்கெட்டிங் 57
சீஃப். சுவாமிக்கும் மிஷனுக்கும் ஏறக்குறைய நூறு மில்லியன் டாலர் கொடுத்திருக்காங்க. எல்லாம் ஒரு பப்ளிஸிட்டி ஸ்டண்ட் பாரு, இந்த லோகத்தில் பொய்யைப் பொய்யால தான் வெல்ல முடியும்.”
பிரமித்துப்போய் போனை வைத்தாள். சற்று நேரத்தில் மறுபடி ஒலித்தது… “காவ்யா, ப்ரவீண் பேசறேன். இன்னிக்கு ஹிந்துல வந்த விளம்பரத்தைப் பார்த்தீங்களா?”
“பாத்தேன்.”
“எப்படியோ கம்பெனில சமாளிச்சுட்டாங்க. எனக்குக் கடுமையான வார்னிங் கொடுத்துட்டு விட்டுட்டாங்க.”
”அப்படியா?” என்றாள்.
“தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்!”
“அப்படியா?”
”அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு. அடுத்தது எங்க விட்டுக்கு எப்ப வர்றீங்க?.
“பாக்கலாம். ஃப்ரியா இருக்கறப்ப வரேன்; நவீன் கூட…..”
“நவீன் யாரு?”
“என்னைக் கட்டிக்கப் போற என் ஆர் ஐ மாப்பிள்ளை” என்றாள்.
போனை வைத்துவிட்டு, ‘உங்களுக்கு மட்டும்தான் பொய் சொல்லத் தெரியுமா?” என்றாள்.
