ரமண விருந்து/சிவ.தீனநாதன்

இவர்தான் ரமணர்!

(பகவான் தன் உடலைத் தொட்டுக் காட்டி, இதில் அப்படி பேர் போட்டிருக்கா? என்றார்.)

ஒரு நாள் ஓர் அடியார் கூட்டம் பகவான் ரமணரைக் காண வந்தது. ரமணர் எங்கே இருக்கிறார் என்று கேட்டவர்களுக்கு ஒரு ரமணத் தொண்டர், பசுவான் சமையற்கட்டிற்குச் சென்றிருப்பதாகக் கூறினார். அந்தப் புதிய யாத்ரீகர் கூட்டம் சமையற் சுட்டிற்கு விரைந்தது.
அங்கேபகவான் என்ன செய்து கொண்டிருந்தார்? மற்ற தொண்டர்களுடன் தாமும் ஒருவராக கோவணாண்டியான பகவான் சமையல் வலையில் ஈடுபட்டிருந்தார். அடுப்பின் மீதிருந்த ஒரு பெரிய அண்டாவின் நெருப்பைத்தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார்.
வந்த அந்த புதியவர்களில் ஒருவர் பகவானையே கேட்டார், ‘ரமணர் எங்கே?’
பகவான் நிமிர்ந்து பார்த்து, வந்தவர்களிடம் அந்தப் பெரிய அண்டாவைக் காட்டி, ‘இவர்தான் ரமணர்”, என்றார்.
வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சமையற்கட்டில் இருந்த ரமண அடியார்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆகையால் பகவான் விளக்கம் தந்தார்.
அந்த அண்டாவின்மீது ‘ரமணர்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அது ரமணாச்ரமப் பொருள் அல்லவா?
பகவான் கூறினார், ‘இந்த அண்டாவின்மீது ‘ரமணர்’ என்று எழுதியிருக்கிறது. பகவான் தன் உடலைத் தொட்டுக் காட்டி, இதில் அப்படி பேர் போட்டிருக்கா?’ என்றார்.
பகவானுக்கு எதிலும் வேதாந்தம். எல்லாமே வேதாந்தம்.

One Comment on “ரமண விருந்து/சிவ.தீனநாதன்”

Comments are closed.