கோ.வைதேகி/நினைவுகள் நிழலாடுகின்றன கதை விமர்சனம்

மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்களின் நினைவுகள் நிழலாடுகின்றன கதை விமர்சனம்
லக்னோவிலிருந்து வெக்கேஷனுக்காக வேணி வருகின்றாள்.தம்பியின் திருமணம் நடக்க இருக்கிறது.இவளைக் கேட்டுத்தான் அப்பா திருமணத்திற்
கு நாள் பார்த்திருக்கிறார்.தம்பியுடன் வரும் கன்னுக்குட்டி சைஸில்
இருக்கும் நாய் சிப்பியை வேணி பிள்ளைகள் இரண்டு இவளுடன் பிறந்த தமக்கை பிள்ளைகள் ஆளுக்கு இரண்டென மொத்தம் ஆறுபிள்ளைகளும் சிப்பியுடன் விளையாடுகிறார்கள்

தம்பியின் திருமணம் முடிந்து கல்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்று விடுகிறான்.வேணி ஊருக்குப் போவதற்கு முன் தம்பியைச் சென்று பார்த்து வர எண்ணுகிறாள்.தமக்கைகள் வரவில்னலையென்று விட பிள்ளைகள் சிப்பியைப் பார்க்க வருவதாகக் கூறுகிறார்கள்.ஆறு பிள்ளைகளைச் சமாளிக்க முடியுமா என்று யோசிக்கையில் வேணியுடன்அவளது கணவனும் வர அப்பா அம்மா என நான்கு பேருமாக பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடிவு செய்து சூட்கேஸ்களை பெரியவர்கள் தமக்கை பிள்ளைகள் எனத் தனித்தனியாக தயார்செய்கிறாள்

காலையில் ஆறுமணிக்குப் பேருந்து ஏறுகிறார்கள்அம்மா வழியில் தன் அக்காவைப் பார்த்துஸவிட்டுச் செல்ல விரும்புகிறார்
ஜன்னலோர சீட்டருகே உட்கார்ந்து வரும் பிள்ளைகள் தூங்கியபடி வருகிறார்கள்.எட்டுவயது ஹரி இடம் மாறிஉட்கார சைதாப்பேட்டையில் இறங்கும் போது பார்த்தால் முன்னால் உட்கார்ந்திருந்த ஹரி இறங்காதது தெரிய ஆட்டோவில் துரத்தியபடி சென்று பேருந்தை நிறுத்தி ஹரியை அழைத்து வருகிறார்கள்..ஆட்டோக்காரர் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க மாட்டீர்களா எனக் கேட்டு விடுச் செல்கிறார்.பெரியம்மா வீட்டில் காலையில்சாப்பிடும் வரைஒழுங்காகப் போகிறதுபின் வதனாவீசிய பந்தில்தொலைக்காட்சிப் பெடியின் கண்ணாடி நொறுங்குகிறது.பின் மதியம் சாப்பிடும் நேரத்திலும் சிறிய தொந்திரவுகள்.வேணி சமாளிக்கிறாள்.

பின் தம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.இரண்டு நாள்கள் சாப்பியுடன் விளையாடுகிறார்கள்.தொல்லை எதுவும் இல்லை.அடுத்த நாள் விஜிபி பார்க்க பிள்ளைகளுடன் செல்கிறார்கள்.சுற்றிப் பார்க்கையில் வாசலில் நிற்கும் ராஜா வேடமிட்டவரிடம் ஏதோ கேள்விகள் கேட்க அவர்ஜபதில் சொல்லாமல் நிற்க எதிர் பாராமல் சிறுவர்களில் இருவர் சிறுகற்களை எடுத்து அவர் மேல் எறிய நெற்றியிலும் மார்பிலும் பட்டு காயமாகிறது.அப்பா இருவர் முதுகிலும் வைக்க இருவரும் அழவேயில்லை.இத்தோடு சாப்படும் போது ஏக ரகளை.எனக்கு உனக்கு என்று..நடுவில் வதனா தூக்கச்சொல்லி கேட்க வேணி தூக்கிக் கொள்கிறாள். இன்னொன்று தூக்கம் வருவதாகக் கூற அவளைப் பார்த்துக்கொள்ளும் அப்பா திரும்பி வரும்போது தன் கைப்பையை மறந்து விட்டு எடுக்கப் போகிறார்.கைப்பை கண்ணாடியோடு ஐந்தாயிரம் பணமும் தொலைந்து விடுகிறது

அடுத்த நாள் நிறைய கண்டிஷன் பிள்ளைகளுக்குப் போட்டு மாமல்லபுரம் அனுப்பிஸவைக்கிறான் தம்பி.அங்கு கடலலையில் சொல்பேச்சுக் கேட்காமல் ஆடி புது செருப்புகளை அலையில் அடித்துச் செல்ல விட்டுபிள்ளைகள் ஒற்றை செருப்போடு நிற்கிறார்கள்.அத்தோடு நான்தான் நீதான் எனப் போட்டிப் போட்டு அம்மாவின் கையைப்பிடித்திழுக்க அம்மா கீழேவிழுந்து கணுக்கால் எலும்பு முறிகிறது.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டுப்போட்டு பேருந்தில் வந்தவர்களை வேன் வைத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறான் தம்பி.

ஹரியின் திருமணத்திற்கு வந்து விட்டு லக்னோ திரும்பும் வேணிக்கு விஜிபியைப பார்க்கும் போது இந்தநினைவுகள் நிழலாடுகின்றன என்று முடிகிறது கதை.
நிகழ்வுகளை எளிமையாகக் காட்சிப்படுத்தியிருப்பினும் குழந்தைகளின் வால்தனங்கள் நகைக்க வைக்கின்றன..நடக்கும் போது தொல்லையாகவும் எரிச்சலாகவும் கோபத்தை வரவழைப்பதாகவும் இருக்கும் நிகழ்வுகள் நடந்து முடிந்த பின் நினைவுகளாக மனத்தில்‌ படிந்துவிடுகின்றன.நினைவுகள் உணர்வுகளோடு தொடர்புடையவை.உணர்வுகள் வாழ்க்கையை உயிர்ப்பாக்கும் காரணிகள்..ஊர் விட்டு நாடு விட்டு வாழ்தலின் பொருட்டுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற நினைவுகள் உன்னதமானவை என்பதை இயல்பாய் சொல்லியிருக்கும் கதாசிரியருக்குப் பாராட்டுதல்கள்.


One Comment on “கோ.வைதேகி/நினைவுகள் நிழலாடுகின்றன கதை விமர்சனம்”

  1. யதார்த்தமான கதை. ஆட்டோ டிரைவர்பிள்ளைகளை சரியாக
    வளர்க்கவில்லை என்பதே இதற்கு
    சான்று.

Comments are closed.