எஸ் வி வேணுகோபாலன்/இன்று தப்பித்தவள்

இடுப்பிலிருக்கும்
தம்பி
மாண்டுபோனது
அறியாது
இன்னும்
இறக்காமல் இருக்கிறாள்
இறந்து போய்விட்ட என் தாய்

எனக்கோர்
பெயரிட்டு
அழைக்காமலே
மறைந்து போனார் தந்தை

என்னோடு விளையாடிக் கொண்டே இருந்த
அண்ணனும் அக்காவும்
விளையாட்டாக ஒரு கணப் பொழுதில்
இல்லாது போனார்கள்

ஒருவரோடொருவர்
ஒருவரையும்
விட்டு விடாது
ஒன்றுபோல் நெருங்கி

இஸ்ரேல் கொடுங்கோல்
குண்டு வீச்சில்
துளைக்கப்பட்டுவிட்ட
உடல்களும்
துளைத்து அழித்துவிட முடியாதுபோன
ஆன்ம உறுதியுமாக

மொத்தக் குடும்பமும்
சார்ந்து நிற்கிறது
அரணாக
என் ஒருத்தியைப்
பாதுகாத்து

இந்த
முடிவற்ற
பெருந்துயரக் கதையை
கொடும் அநீதியை

உலகுக்குச் சொல்லி விடுமாறு என்னைப் பணித்தும்-

அடுத்த குண்டு வீச்சில்
என் ஆவியும் பறிபோகும் என்று எச்சரித்தும்!

ஓவியம் : பாலஸ்தீன ஓவியர் ரீத் யூசுஃப் கட்னானி

3 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/இன்று தப்பித்தவள்”

Comments are closed.