
அழகியசிங்கர்
என்பா 63
எல்லோரும் கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறோம்
கவிதையைப் படித்துக்
கொண்டிருக்கிறோமா
தெரியவில்லை
ஒருவர் கவிதையை
பாராட்டுகிறோமா
தெரியவில்லை.
அவசரமாகக் கவிதை புனைகிறோம்
என்பா 64
என் வீட்டு
வாசலில் செத்த
எலிகள். பூனைகள்
சாப்பிடாமல் கொன்றுவிட்டுப்
போடுகின்றன். நாங்கள்
அருவெறுப்பாகப் பார்த்துவிட்டுப்
போகிறோம். பரந்தாமா உன் துணை
