ஒரு புள்ளி மறைந்து விட்டது…
அழகியசிங்கர்
நான் பொதுவாகப் பெங்களூர் செல்லும்போது இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன். ஒன்று புத்தகக் கடைக்கு. அடுத்தது அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் வீடுகளுக்கு.
சமீபத்தில் பாரதிமணியை இரண்டு முறை அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன். நான் தனியாக அவர் வீட்டிற்குச் சென்றதில்லை. யாரையாவது அழைத்துக்கொண்டுதான் போவேன். அவர் வீட்டை கண்டுபிடிப்பதில் எனக்குக் குழப்பமாக இருக்கும். ஒருமுறை நெருங்கிய உறவினருடன் சந்தித்தேன். அப்போது என்னுடைய சோனி காமெராவை எடுத்துக்கொண்டு போகவில்லை.
இரண்டாவது முறை எழுத்தாளர் சிந்துஜாவுடன் போய்ப் பார்த்தேன். வழக்கம்போல் பாரதிமணி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு எங்களை வரவேற்றார். வாயில் பைப் வைத்துக்கொண்டு. அவருக்கு நண்பர்கள் கொடுத்த புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். பொழுது போனது தெரியாமல் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த முறை சோனி காமெராவை எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அவரை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்று பேட்டி எடுத்தேன். அவர் நினைவாக அந்தப் பேட்டியை ஒளிபரப்புகிறேன்.

இயல்பான பேட்டி. இறுதிவரை வாழ்க்கையை ரசனையோடு வாழ்ந்திருக்கிறார்.