ஜெய் யோகி ராம்சுரத்குமார்/வளர்மதி

பகவான் சொல்கிறார் ஒருவர் அவரிடம் பல பிரச்சனைகளோடு துக்கங்களோடு சென்ற பொழுது பகவான் அவரைப் பார்த்து சொல்கிறார் என்னுடைய தந்தை நீ இந்த துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் இந்த மாதிரியான கஷ்டங்கள் பெரிய ஞானிகள் வாழ்க்கையிலும் நேருகிறது அதனால் இதை நீ பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்னுடைய தந்தை எப்போதும் உன்னோடு இருக்கிறார். எது நடந்தாலும் அதை இறைவனின் இச்சையாக ஏற்றுக் கொள். அதில் எந்த தவறும் கிடையாது எல்லாம் சரியாகவே இருக்கிறது. ஏனெனில் எல்லாவற்றையும் நடத்தி வைக்கும் என் தந்தை அவர் perfect ஆக இருப்பதால் அவரது லீலைகளும் perfect ஆகவே இருக்கும். முழுமையாக இருக்கும் சரியாக இருக்கும்.