காவனூர் சீனிவாசன்/எதிரெதிர் கட்டங்கள்

காலியாகத் தான்
இருக்கின்றன.

எல்லாம்
அன்பின்
சதுரங்கக் கட்டங்கள் தான்.

நகர்ந்தாலும்
நகராவிட்டாலும்
வெட்டு விழும்.

பார்த்து நகர்த்து
சொற்களையும்
மௌனங்களையும்.