
ஒரு பயணத்தில்
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் அம்மாவிற்கு பிடிக்கவில்லை
திசை திருப்ப
குழந்தைக்கு வேறு பக்கம்
வேடிக்கை காட்டினாள்
என் தோற்றம் அப்படி.
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் அப்பாவிற்கு
பிடிக்கவில்லை
திசை திருப்ப
குழந்தையை இடம் மாற்றி
அமர வைத்தான்
என் தோற்றம் அப்படி.
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் தாத்தாவிற்கு
பிடிக்கவில்லை
திசை திருப்ப
குழந்தை கையில் விளையாட
பொம்மை கொடுத்தார்
என் தோற்றம் அப்படி.
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் பாட்டிக்கு
பிடிக்கவில்லை
திசை திருப்ப
குழந்தை வாயில் இனிப்பை
ஊட்டி விட்டார்
என் தோற்றம் அப்படி
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது
பதிலுக்கு சிரிக்க ஆசையாய் இருந்தது முடியவில்லை.
அதனுடன் இருந்தவர்கள் தோற்றம் அப்படி..
()
