
11.06.2024
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : ஒரு வழியாக விருட்சம் 126வது இதழ் வெளிவந்துவிட்டது.
மோகினி : சமீபத்தில் பெங்களூர் போய் விட்டு வந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். குடும்ப விஷயமாகப் போனேன் ஒரு வாரம் வரை தங்கி விட்டேன். விருட்சம் எல்லா நூலகத்துக்கும் அனுப்பிவிட்டுத்தான் போனேன். இன்னும் பலருக்கு அனுப்ப வேண்டும்.
மோகினி : நீங்கள் மெதுவாக அனுப்பலாம்.
அழகியசிங்கர் : உண்மைதான். விருட்சம் ஒரு நிதானமான பத்திரிகை. மெதுவாக அனுப்பலாம். மெதுவாகப் படிக்கலாம்.
மோகினி : பத்திரிகையை அனுப்புவதற்குள் உங்களுக்குப் போதும் போதுமென்று ஆகிவிடும்.
அழகியசிங்கர் :. எல்லாம் நான் என்பதால் அந்தப் பிரச்சினை.ட
ஜெகன் : பெங்களூரில் நீங்கள் ப்ளாசம்ஸ் போனீர்களா?
அழகியசிங்கர் : போனேன். எனக்குக் கோயில் மாதிரி ப்ளாசம்ஸ். எனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கினேன். நான் இருக்குமிடத்திலிருந்து ப்ளாஸம்ஸ் அதிக செலவாகிறது. ஆட்டோவில்தான் போனேன். வரும்போது டாக்ஸியில் வந்தேன். புத்தகம் வாங்கும் செலவை விட அதிகம் செலவாகிறது பயணச் செலவு. சுமை கூலி அதிகம்.
மோகினி : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் புத்தகங்களை வாங்கினீர்களா?
அழகியசிங்கர் : வாங்கினேன். எட்டுப் புத்தகங்கள் வாங்கினேன். பழைய புத்தகம் ஒவ்வொன்றும் ரூ.250 ஆகிவிடுகிறது.எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஐ.பி.ஸிங்கர் கதைகள் அதிகமாக உள்ளன. என்கூட வந்த நண்பர் ஐ.பி.ஸிங்கரா என்று கேட்டார். அதனால் ஒரு புத்தகம் மட்டும் வாங்கினேன்.
மோகினி : முக்கியமான புத்தகம் எதாவது வாங்கினீர்களா?
அழகியசிங்கர் : நான் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் முக்கியமான புத்தகங்கள்தான். சல்மான் ருஷ்டியின் நைவ் என்ற புத்தகம் வாங்கினேன்.
மோகினி : ஆவலாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிய.
அழகியசிங்கர் : நான் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.23)

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 76/அழகியசிங்கர்”
Comments are closed.