17.06.2024
ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : வாழ்த்துவோம்.
மோகினி : யாரை?
அழகியசிங்கர் : பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற யூமா வாசுகியையும், யுவ புரஸ்கார் விருதுபெற்ற லோகேஷ் ரகுராமனையும்
மோகினி : நாங்களும் வாழ்த்துகிறோம்.
அழகியசிங்கர் : விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வோகேஷ் ரகுராமனும், தன்வியின் பிறநத நாள் என்ற சிறார் நூலிற்காக யூமா வாசுகிக்கு பால சாகித்ய பரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
மோகினி : பெங்களூரிலிருந்து வெளியே வந்து விட்டீர்களா?
அழகியசிங்கர் : ஒருவாரம் பெங்களூர் குளிர்ச்சி சிறப்பாக இருந்தது.
ஜெகன் : ப்ளாஸம்ஸில் எத்தனைப் புத்தகங்கள் வாங்கினீர்கள்?
அழகியசிங்கர் : 11 புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். இன்னும் திருப்தியடையவில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம். லட்டர்ஸ் டு வெலிஸி என்ற காப்பா எழுதிய புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் கிடைத்தது இந்த முறை.
மோகினி : வாங்கினீர்கள் சரி. எப்போது படிக்கப் போகிறீர்கள்?
அழகியசிங்கர் : நியாயமான கேள்வி. பதில் எனக்குத் தெரியாது.
மோகினி : நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
அழகியசிங்கர் : எலலாப் புத்தகங்களையும் படிக்க முடியுமா என்பது தெரியாது. புரட்டியாவது பார்க்க முடியும். அல்லது பார்க்காவது முடியும். சிலவற்றை எடுத்துப் படிக்கவும் முடியும்.
ஜெகன் : உங்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் அருமை உங்கள் குடும்பத்தினருக்குத் தெரியுமா?
அழகியசிங்கர் : தெரியாது. மனைவியுடன்தான் நான் பெங்களூருக்குச் சென்றேன். என்ன புத்தகம் நான் வாங்கியிருக்கிறேன் என்பதை என் மனைவி புரட்டிக்கூடப் பார்க்கவில்லை.
ஜெகன்: உங்கள் அருமை யாருக்கும் தெரியவில்லை.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.28)
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 76/அழகியசிங்கர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
