எஸ் வி வேணுகோபாலன் /உறைந்த தேதி

ஆசீர்வதித்த கைகளிரண்டில்
உறைந்திருக்கிறது காலம்

அப்பாவின் வெடிச் சிரிப்பு
ஒலித்துக் கொண்டிருக்கிறது
காதுகளில்!
கனிவின் பொழிவான குரல்
பூத்திருக்கிறது
செம்பருத்தியாய்
பாரிஜாதமாய்
மாம்பூவாய்
வீட்டுத் தோட்டமெங்கும்..

அவர் மறைந்த தேதியை
இன்றும் காட்டும்
காலண்டர் தேதியைக்
கிழித்து விடுகிறேன்
மூன்றாவது ஆண்டாக..

மானசீகமாக
பின்னோக்கிப் போய்ப்
புரட்டிப் பார்த்துக் கொள்கிறேன்
அவரிருக்கும் நாள்களின் தாள்களை

One Comment on “எஸ் வி வேணுகோபாலன் /உறைந்த தேதி”

  1. தலைப்பே அருமை. நம்முள் ஊறிப்போன நினைவுகள்.
    அப்பாவை மட்டுமா, ஒவ்வொரு உறவையும் கொண்டாடுகிறீர்கள் நீங்கள் உங்கள் கவிதை, கதைகள் மூலம். இசைபாபயணமா போலவே
    ஒவ்வொன்றூம் இனிமை.

Comments are closed.