அதிரன் கவிதை

விமானம்
தரையிறங்குவது போல்
பூங்காவின் புல்தரையில் தரையிறங்கியது
ஒரு பட்டாம்பூச்சி
இறங்கிய இடத்திலே சற்று நேரம்
சிறகுகளை மடக்கியும் விரித்தும்
ஏதோ பலத்த யோசனையில் ஆழ்ந்தது.
பின்பு முன்னும் பின்னும் சற்று நடந்தது
தீடிரென்று மீண்டும் பறக்கத்
தொடங்கியது.
இதையெல்லாம் காணுற்ற அவன்
மனதில்
“வரச்சொன்ன யாரோ வரவில்லையோ?
நாளைய சந்திப்புக்கு ஒத்தி கையோ ?”
என கேள்விகள் தோன்றி மறையும் முன்னே
வேகமாக
தரையிறங்கிக்
கொண்டிருந்தது இன்னொரு
பட்டாம் பூச்சி