
எழுத்து இலக்கியம் என்பதெல்லாம் வெறும் கானல் நீர் என்பது தெரிந்து விட்டது. முழுநேர எழுத்தாளனாகவோ, பத்திரிகையாளனாகவோ வாழ்வது என்பது சாத்தியமில்லை. பசி, பட்டினி, வறுமை இவைதான் இலக்கியம் தந்த பரிசு. பிரபலமான பத்திரிகையில் வேலை கிடைத்தால் ஏதோ ஒரு மாதிரி தப்பிக்கலாம். இல்லை ஏதாவது நல்ல வேலையில் இருந்து கொண்டு கதை, கவிதை என்று ஓய்வுநேரத்தில் எழுதிப் புஸ்தகம் போடலாம். இலக்கியப் பத்திரிகைகளில் வேலை பார்ப்பது அல்லது முழுநேர எழுத்தாளனாக வாழ்வதென்பது, தன் தலையைத் தானே கொய்து கொள்வதற்குச் சமம்.
ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் எல்லாம் எழுத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அகிலன் அகில இந்திய வானொலியில் வேலை பார்த்தார். தி.ஜானகிராமன் கூட அகில இந்திய வானொலியில்தான் வேலை பார்த்தார். ஜெயகாந்தனின் மனைவி பள்ளி ஆசிரியை. அதனால் ஜெயகாந்தன் சம்பாத்தியத்தை நம்பி அவர் குடும்பம் இல்லை. இந்திரா பார்த்தசாரதி தில்லியில் பேராசிரியராக வேலை பார்த்தார். சுஜாதா பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலை பார்த்தார்.
ஒரு சிறுகதையோ, ஒரு நாவலோ வெளிவந்தால் அதைப் பாராட்ட நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் அதை எழுதிய எழுத்தாளன் முழுநேர எழுத்தாளனாக இருந்தால், அவனுடைய ஜீவனோபாயத்துக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சிறிது புகழ் இருக்கும்; ஆனால் பணமிருக்காது. இதுதான் எழுத்துலகம். இதுதான் இலக்கியம்.
–

எவ்வளவு எதார்த்தம்