சசிகலா விஸ்வநாதன்/தந்தையர் தினம் கவிதை ஒன்று

சொத்தை அழித்த ஊதாரி பிள்ளைக்கு
ஒற்றை ரூபாய் அரசு
பரிசு சீட்டுகள்
கற்றை கற்றையாய் வாங்கி தலையணையடியில்
கரந்து வைக்கும் ஒரு தந்தையை
நான் அறிவேன். மாதம் ஒரு முறை
அதன் முடிவறிந்து
வெறித்த பார்வையுடன்,
காலாவதியான சீட்டுகளை எவரும் அறியாமல்
ஏன் வைத்தார் என்றுதான் நான் அறியேன்.
அவர் நிராசையை புதைத்தாரோ அவ்விதமாய்?