அதிரன்/ தந்தையர் தின கவிதைகள்

1 .
கண்ணாடியில்
முகம் பார்க்கிறேன்
அப்பா தெரிகிறார்
ஓ …எனக்கு வயதாகி விட்டதோ?

2.

சலவை செய்த
சட்டையில் இன்னமும்
மீதம் இருக்கிறது
அப்பாவின் வியர்வை வாசனை

3.

அம்மாவின் அன்பை
அவள் பாலூட்டும் போதே புரிந்து கொள்ளும் நாம்…….

ஏனோ அப்பாவின் அன்பை
அவருக்கு பால் ஊற்றும் வரை புரிந்து கொள்வதே இல்லை…

_