விஞ்ஞானி/விஷம்

கருணாபுரம் கள்ளச்சாராய பலி
நாற்பது.
நாற்பதுடன் நிற்கவில்லை மரணமும் ஓலமும்
காரணம் யாரென கேள்வியும்
கோபமும்
அறியாமைக்கு உயிரீந்த
சோகமும்

இறைவன் தேசத்திலும் இல்லார் குப்பத்திலும்
விலக்கில்லா பழக்கத்தினால்
புழக்கத்திலே சாராயம்
அரைவிலை சரக்கு அதிலே
ஆதாயம்
என்றென்னி இழப்பதோ
உயிராகும்.

பிறர்மேல் குற்றம் சொல்பவர்
விரல்களில்
பெரும்பாண்மை அவர்களையே
சுட்டிக்காட்டும் அவலம்.
மரணத்தில் அரசியல் செய்யும்
கேவலம்.
சுயநல மண்ணிலிது
நிரந்தரம்.