
கருணாபுரம் கள்ளச்சாராய பலி நாற்பது!
கள்ளும் புகையும்தான் இங்கே விற்பது!
உருவழிந்த குடும்பங்கள் தெருவில் நிற்பது!
உலகிலில்லா அநீதியிதை யார்தான் கேட்பது?
இயற்கை அழகில் உண்டே போதை
இனிய இசையிலும் உண்டே!
உயர்வில் வெற்றியில் உண்டே போதை!
உறக்கத்தின் ஆழத்தில் உண்டே!
நன்மையைத் தொலைத்தோம் நாகரீகம் அழித்தோம்
நாடு எங்கே போகிறது?
புன்மையை ரசித்தோம் வன்முறை விதைத்தோம்
புதுத் தலைமுறை என்ன ஆகிறது?
அறத்தை அழித்த கயவர் தம்மை
அறவே அழிக்கும்வரை நில்லாதீர்!
கருணாபுரமென்று அதுவரை பெயரை…
கடவுளுக்கே அடுக்காது, சொல்லாதீர்!
