
நூல்கொண்டு பின்னியவேலி
நூலிலை பிரிந்தாலும் தகர்ந்துவிடும்…
அறுத்தெரிவது ஒன்றும் ஆனந்தமில்லை.
நூல்வேலியை மாபெரும்
விலங்கென்று ஆண் இனம் நம்பிக்கொண்டிருக்கிறது.
நான் எனக்குள் பூட்டிக்கொண்டதால் நீ சுதந்திரமாய் இருக்கிறாய்.
நம்பிக்கைகொண்டுவாழ்வதில் …இருவருக்குமான பார்வைகள் ஒத்ததிசையில் இருக்குமென்று சொல்வதற்கில்லை….
ஒரேபடுக்கையில் படுத்தாலும்
அவரவர் மனங்களின் கோணங்களை யாரும் அறிவதற்கில்லை.
ஒழுக்கமென்பது எனக்குள் நான் முடிவெடுப்பது…தாலியோ…வேலியோ எதுவாயினும் என்னைமீறி எதுவுமில்லை.
ஆகவே அன்புக் கணவனே…நூல்வேலியின் முனை
உன்னிடமே இருக்கட்டும்…இந்த உலகம் தாய்மையை நம்பியிருக்கிறது.
அதற்காகவாவது ….!
♦.

Pramadham !🙇♀️🙏👏